Monday, September 30, 2013

தஞ்சாவூர் அரசு பொருட்காட்சி : Thanjavur Govt Exhibition'2013

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் முனிசிபல் திடலில் அரசு பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. நேற்று இரண்டு குட்டிப் பெண்களுடன் அந்தப் பக்கமாக நடையைக் கட்டினோம்.

பொருட்காட்சியின் முதல் நாள் என்பதால் அனுமதி இலவசமாக வழங்கப்பெற்றோம். அத்தனை சிறிய மைதானத்திற்குள் நல்ல திட்டத்துடன் ஸ்டால்கள் அமைக்கப்பெற்றிருந்தாலும், எங்கெங்கும் காணும் மக்கள் கூட்டத்தைத் தவிர சிறிய/பெரிவர்களுக்கென்று மகிழ்வூட்டி தொண்டையை உடைத்துக் கொண்டு கதற வைக்கும் ஃபன் ரைட் எதனையும் காணவில்லை.

பின் வரும் நாட்களில் அவைகள் சேர்ந்து கொள்ளுமோ என்னவோ. போலவே, நிறைய விற்பனை ஸ்டால்களும் இன்னும் அமைக்கப்படவில்லை. அவர்களும் அவர்களின் வழிகளில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொலைந்த போன கூட்டத்திற்குள் என்னை கண்டு கொண்டது போல அத்தனை மக்களையும் ஒரு சேர ஓர் இடத்தில் வைத்து மையமாக உணவு மைதானத்தில் அமர்ந்து பொண்ணுங்களோட ஒரு சிறு சிற்றுண்டி உண்டது ஹம் ஹம்ம்ம் அனுபவம்! பெண் சிறிதே ஆடினாள்... சாப்பிட்டுக்கொண்டே!

சவகாசமாக மீண்டும் ஒரு முறை பொருட்காட்சி திடல் சூடு பிடிக்க ஆரம்பித்த நாட்களில் செல்ல வேண்டும்.

1) காட்சித்திடலின் நுழைவு வாயில் ...



2) திடலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வனத் துறை காட்சியகம்...







3) ஆவின் பால் நிலைய ஸ்டாலுக்கு நேர் எதிர் முனையில் அமைந்திருக்கும் மீன் வளத்துறை ஸ்டால். இங்கே என்னோட அறுபது வயதித்திய புறக் கண்ணாடி பிம்பம் ஒன்றைச் சந்தித்தேன் :) ...




4) தொடக்க நாள் என்பதால் ஏதோ வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி ஓர் அண்ணாவும் தங்கையும் தங்களது திருமணத்தை சார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். வரதட்சிணை கொடுப்பதும்/வாங்குவதும் தவறு என்ற உரையாடலும் காதில் விழுந்தது. தாண்டிச் சென்று, அண்ணா தனது தங்கையை மூளைச் சலவை செய்வது போன்ற ஒரு உரையாடலில் கூறினார் - திருமணத்திற்கு பிறகு தனித் தனியாக குடும்பம் அமைவதே நம் சமூக வழக்கு என்று?! :)


6) பொண்ணு டொய் ஸ்டால் டொய் ஸ்டால் என்று படுத்த ஆரம்பித்து கண்களில் கண்ணீர் குளம் வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு தருவாயில், இந்த வடக்கத்தி தம்பி ஒருவன் உயிர் காத்தான்... :)



3 comments:

ஜோதிஜி said...

இது ஒரு பொம்பள படம் தெரியுதே? யாரு இந்தம்மா?

Thekkikattan|தெகா said...

இதில நிறைய பொம்பளப் படமிருக்கு எதைன்னுய்யா சொல்லுறது. ஆனா, ஒண்ணத்திலும் நம்ம வீட்டு ஆட்கள் இல்லையப்பூ ;) -

இல்ல நம்ம பெரிச அப்படி பூடகமா கேக்குறியளா ??

ஜோதிஜி said...

இல்லப்பா தமிழ்நாட்டை ஆண்டுடுடுடுடுடுடுடுடுடுடுக்கிட்டு இருக்கிற ஆத்தாவைத்தான் கேட்டேன்.

Related Posts with Thumbnails