கொஞ்சம் எதிர்பார்ப்புடன் சென்ற படமிது "The dawn of the planet of the apes." மற்ற பாகங்களைக் காட்டிலும் இந்த பகுதி மிக நெருக்கமாக உணரவைத்தது! அதற்கான காரணமாக நான் எடுத்துக் கொண்டது, இன்றைய நாளில் நம்முடன் வாழும் போனோபோ வகை சிம்பன்சி வாலில்லா குரங்குகளிலிருந்து படத்திற்கென ரொம்ப வித்தியாச படித்தி காட்டி விட எத்தனிக்காமல், அப்படியே அதன் உடல் புற அமைப்பிலும் முக வெளிப்பாடுகளிலும் வித்தியாசம் காட்டாமல் அமைத்துக் காட்டியது. மேலும், இன்றைய உலக அரசியல் மேடையில் மேற்கத்திய கலாச்சரம் பிற இனங்களின் மீது கட்டவிழ்த்து விடும் உளவியல் போர் குயுக்த்தியும் சற்றே கூர்ந்து கவனிக்க வைத்தது.
ஓபனிங் சீன் வால்பாறை மழைக்காடுகளில் சிங்கவால் குரங்குகள் தலைக்கு மேலாக கரும் மேகமென பரவித் திரியும் ஓர் உணர்வை, இந்த படத்தில் வரும் ஏப்கள் தாவித் திரியும்படியாக காட்சியாக்கிய கோணம், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இருப்பினும் படத்தின் பிற பகுதிகளில் அப்படியாக இல்லை. வெறும் விடியோ கேம் பார்ப்பதையொத்து அமைந்து போனது மிக்க துரதிருஷ்டவசமானது.
ஏப்களின் தலைவனாக வரும் சீசர் துப்பாக்கி நொறுக்கும் காட்சி மனிதன் முன்னிருத்தி வரும் வன்முறை கலாச்சாரத்திற்கு நுட்பமாக வைக்கப்பட்டிருக்கும் ஓர் அழுத்தமான குறியீடு.
இந்த படத்தை என்னால் இரு வேறு பரிணாம உச்சத்திற்கு வரத் துடிக்கும் இனங்களுக்கிடையே நடக்கும் தப்பிப்பிழைப்பதற்கென நடைபெறும் போராட்டமாக, ஒரு பரந்த பார்வையில் மட்டுமே வைத்து பார்க்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்தேறும் மதம், இன வேறு பாடுகளைக் கொண்டு நம் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே வைத்துப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்தது.
இன்னும் சுருக்கி கூறி சிறிய திரையில் விரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமானால், மேற்கத்திய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளின் மீதாக கட்டவிழ்த்து விடும் உளவியல் போராகவும் பார்க்கத் தூண்டுகிறது. உதாரணமாக, இந்த ஏப்கள் தங்களுக்குள்ளாக மொழியின் ஊடாக விசயங்களை பேசி புரிந்து கொள்வது, ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுவது போன்ற காட்சியமைப்புகள் இன்றைய பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இன பிரச்சினையை வைத்து பார்க்கும் படியாக எச்சரித்து செல்வதாக புரிந்து கொள்ளலாம்.
துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு தங்களின் நியாயமான காரணங்களுக்காக இந்த ஏப்கள் போராடத் தயாரானாலும், துப்பாக்கிகளை விட அதி நவீன கன ரக ஆயுதங்களைக் கொண்டு கொத்து கொத்தாக எங்களால் உங்களை கொன்றொழிக்க முடியும் என்ற அபாய மணியை அழுத்தமாக இது போன்ற சிறு இனங்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான பிரச்சாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
மனிதன் எப்படி துரோகங்களையும், வெறுப்பையும், தன்னை தக்க வைத்துக் கொள்ளும் முன் அவசரத்தன்மையில் கண் மூடித்தனமாக மன சாட்சி அற்று இயங்குவதும், முன் கோபியாக தனது மனித இனத்தையே அழித்துக் கொள்ளும் பாதையில் நடக்கிறான் என்பதனை இந்த படத்தில் ஏப்களை விட்டு கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.
ஏப்கள் வன்முறையை விரும்பது கிடையாது. ஏப்கள் தங்களுடைய இனத்தில் ஒருவரையே கொல்லாது. ஏப்களின் தளபதியை நோக்கி சீசர் கூறும் ஒரு வசனம் - மனிதர்களிடமிருந்து நீ கற்றுக் கொண்டது கோபமும், வெறுப்பும் மட்டுமே என்று ஒட்டு மொத்த தற்கால மனித இனத்தை தங்களுக்கும் பின் தங்கியவர்களாக கூறி இந்த படம் முன் நகர்கிறது.