ஒரு காலத்தில் நாடோடியாக சற்றே முன்னேறி வால் இல்லாத குரங்காக திரிந்த நாம், நம்முடைய சுயநலத்திற்கென பிற விலங்குகளை நம்முடைய தேவைக்கென பழக்கப்படுத்தி நம் வேலைப் பளுவை அதன் மீதி ஏற்றி இளைப்பாறிக் கொண்டோம்.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Thursday, December 31, 2020
செக்கு மாட்டுத் தனம் யாதெனில்? Sapiens
Posted by Thekkikattan|தெகா at 7:19 PM 0 comments
Labels: சமூகம், பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
Wednesday, September 09, 2020
மனிதனின் நாளைய பரிணாமம்: Future of Sapiens
இப்பவும் நாம் படிமலர்ச்சி பாதையில் தான் பயணிக்கிறோங்கிறதிற்கு ஒரு சிறு உதாரணம். இதைப் படிக்கிறவங்க கோவிச்சிக்கப்பிடாது.
பதில்: நாம இன்றைய வாலில்லா குரங்கினங்களிலிருந்து பிரிந்து படிமலர்ச்சியடைய ஆரம்பித்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து நமக்கு இணையான நமது மூதாதையர்கள் வழிப் பாதையில் பெற்றும், இழந்து மென நடந்த மென் நடையில் இன்று சற்றேறக் குறைய ஒன்னரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன வடிவை எட்டி, ஜஸ்ட் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளாகவே நாகரீகமடைந்த கூட்டமாக வாழ்ந்து வருகிறோம்.
இப்போ நீங்க பரிணாமத்தை நம்பல. நான் அறிவியல் பின்னணியில், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறவன்னு வைச்சிப்போம். இங்கே இரண்டு விதமான மனித குழுக்கள் பிளவுற்ற நிலையில், ஆனால், சைட் பை சைடாக வாழ்கிறது.
இதுவே எதிர்கால பரிணமிப்பு! அப்போ அந்த அழிந்து போன ஆள் எங்கே காட்டு என்று கேட்க முடியுமா? குரூட் பரிணாமக் கால கட்டத்தில், அலை அலையாக கிளம்பிய போதுதான் அந்த ஹோமினிட்ஸ் இன வகைகள் தேவைப்பட்டது (அவைகளில் சில, ஆஸ்ட்ரோல பித்திகஸ் அ•பரென்சிஸ் ↔️ ஹோமோ எரக்டஸ்↔️ஹோமோ ஹாபிலிஸ்↔️ஹோமோ நாலேடி↔️ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ்,↔️ ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ்➡️). Posted by Thekkikattan|தெகா at 4:19 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம்
Sunday, September 06, 2020
படிமலர்ச்சிக் கூண்டிற்குள் கடவுள்: Why evolution is true? Part 4
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.Posted by Thekkikattan|தெகா at 7:35 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
Sunday, August 30, 2020
கரையில் திரிந்த பாலூட்டி திமிங்கலமானது எப்படி? Part 3
இன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.Posted by Thekkikattan|தெகா at 10:44 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
டைனோசர் பறவையான கதை: Part 2
தண்ணீருக்கும் நிலத்திற்குமாக சென்றுதான் வாழ வேண்டுமென்ற அந்த இரட்டைதன்மை இல்லாது, முழுமையாக நிலத்திலேயே வாழும் ஊர்வனவாக அடுத்து வந்த காலகட்டங்களில் அவைகளில் சில பரபரவென தேவையானவற்றை பெற்றும், இழந்துமென முழுமையான தகவமைவைப் பெறுகிறது. இது வரையிலுமே அவைகள் யாவும் குளிர் இரத்த உயிரினங்களாகவே (cold blooded animal) உள்ளது. அதாவது அவைகளின் உடல் வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறாது.
அவற்றில் சில வேகமாக ஓடி முன்னங்கால்களை படக்கென்று காற்றில் வீசி இரையைப் பற்றி வாயிக்கு எடுத்துச் செல்லும் நுட்பம், பறவைகளுக்கு தேவையான அதே தசை கட்டமைப்பை மெல்ல உள்வைத்து நகர்கிறது படிமலர்ச்சி. இதற்கிடையே பறவைகளின் இறகுகளில் இருக்கும் முடியையொத்த ஒரு தகவமைப்பை பெறுகிறது. இது எதற்காக தோன்றியிருக்கக் கூடும் என்பதில் இரண்டு விதமான கருதுகோள்கள் உண்டு: இணையைக் கவர்வதற்கு அல்லது உடலை வெப்பமேற்றி வைத்துகொள்ள.Posted by Thekkikattan|தெகா at 8:02 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1

அதாவது நீரில் இருந்து வெளியேறி ஒரு குட்டையை விட்டு இன்னொரு குட்டைக்கு தாவி ஏறி முறையான நான்கு கால்களைப் பெறாமலேயே முன், பின் துடுப்புகளில் இன்றைய நம் கால், கைகளுக்கு பயன்படுத்தப் போகும் அதே எலும்புகளை மெல்ல மெல்ல படிமலர்ச்சியுனூடாகப் பெற்று வெளிக்கிட விடிந்தது, நீர் நில வாழ்வனவற்றின் முன்னோடி.Posted by Thekkikattan|தெகா at 7:46 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
Friday, April 12, 2019
புத்திசாலி – டைனோசாரா, மனிதனா?: ஒரு படிமலர்ச்சிப் பார்வை
அப்படியான பாறை குழம்பு சுமார் 252 மில்லியன் ஆண்டு வாக்கில் சைபீரியப் பகுதியில் உடைத்துக் கொண்டு மேலே எழும்பி எரிமலைகளின் வழியாக வெடித்து ஆறாக பல நூறு ஆண்டுகள் ஓடி பல கண்டங்களை நிரப்புகிறது. அது போன்றதொரு நிகழ்வுகள் நடை பெறும் கனம் தோறும் சுற்றுப்புறச் சூழலில் பல விதமான மாற்றங்களை உடனடியாகவும், பின் வரும் காலங்களுக்கும் நிரந்தமாக மாற்றி அமைக்கிறது. தவிர்க்க முடியாத பூமிய படிமலர்ச்சியின் இது போன்ற பெரும் நிகழ்வுகள் நடைபெறும் போது 80 சதவிகித உயிரினங்கள் மாண்டழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறதாம்.Posted by Thekkikattan|தெகா at 8:48 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம்
Thursday, February 14, 2019
ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3
Posted by Thekkikattan|தெகா at 3:50 PM 0 comments
Labels: எழுத்தாளர்கள், படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
Sunday, January 27, 2019
உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2
Posted by Thekkikattan|தெகா at 9:22 PM 0 comments
Labels: இயற்கை, எழுத்தாளர்கள், படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், விமர்சனம்
Saturday, January 26, 2019
மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1
இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று. இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!
ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.
இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.
இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.
உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲
மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.
இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.
அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.
அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.
இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...
அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏 Part 2 Link : உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2
Posted by Thekkikattan|தெகா at 10:13 PM 0 comments
Labels: எழுத்தாளர்கள், படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன், விமர்சனம்
Thursday, September 08, 2016
மனிதன் பாதி மிருகம் மீதி: மரபணு சீரிஸ் - I
நாமும் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் அது மேம்பட்ட பாலூட்டிகளாகவோ, அல்லது பறவை இனங்களிலிலோ, ஏன் கரையான், எரும்பு வகைகளில் கூட இந்த சுயநலமற்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருப்பதை கண்டிருக்கலாம்.
உதாரணமாக அணில், ஆட்காட்டி குருவி, அல்லது குரங்கு தனக்கென்று பிரத்யோக பாதுகாப்பினைக் கொடுக்கத்தக்க வகையில் முட்டையிட்டோ அல்லது குஞ்சுகள் கூட்டிலோ அல்லது குட்டிகள் அருகமையோ இல்லாத பேச்சிலராக இருந்தாலும், தனக்கு ஆபத்தை உடனடியாக இழைக்கும் விலங்கு, அல்லது சூழல் இருப்பினும் ஏன் ஒலி எழுப்பி மற்ற தன் இன உறுப்பினர்களை விழிப்பு கொள்ளச் செய்கிறது? தனக்கு உடனடியான மரணமே சம்பவிக்கலாம் என்றாலும் ஏன் அனிச்சையாக செய்து வைக்கிறது என்றபடியாக உள்ளது அந்த கேள்வி.
இதற்கு விடையாக தனி நபர் உயிர், உடல் சார்ந்த விசயங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள எப்படி சுயநல மரபணு அவைகளிடையே பரிணமித்து ஓர் உயிரினத்தை இனமாக இந்த பூமியில் தக்கன பிழைக்க வைக்க உதவுகிறதோ, அதனையொத்தே இந்த சுயநலமற்ற மரபணு பரிணமிப்பு தன்னையொத்த மரபணுக்களை கொண்ட பிற குடும்ப நபர்களாவது தன் ஒரு உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை பெரிதளவில் மிச்சமிருப்பவர்கள் அந்த மரபணுக்களை கடத்திச் செல்ல வாய்ப்பாக அமையுமென்று இந்த தற்சார்பு தற்கொலைக்கு தன்னையும் தாண்டி பரிணாம வழியாக எடுத்து வந்திருப்பதாக பேசுகிறது அந்த புத்தகம்.
இதனையொட்டியே தேனீக்கள், எரும்புகள், கரையான்களிலெல்லாம் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கத்திற்கு லாயக்கில்லாத உழைப்பாளி நபர்கள் இருந்தாலும், அவைகளின் ப்ரக்ஞையற்ற தற்கொலைச் செயல்களை இந்த மரபணுவே செயலாற்ற வைக்கிறதுன்னும் புரிஞ்சிக்கிறேன்.
போலவே, நம்முடைய செயல்களிலும் இது போன்றே மரபணு தற்காப்பிற்கெனவும், ஓர் இனமாக பரிணமித்து நம்மை தக்க வைத்துக் கொள்ளவும், எது போன்ற செயல்பாடுகளெல்லாம் இந்த இயற்கை கால ஆற்றில் பயனுள்ளதாக இருக்கிறதோ அதெல்லாம் மரபணுவிற்குள் பொதிக்கப்பட்டு நாம வெறும் இயந்திரம் போன்று ஏன், எதற்குன்னு கேள்வி பதில் செஞ்சிக்காமயே குட்டி போட்டு, வளர்த்து, வெட்டுக் கொத்து நடத்தி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு போற அளவிலேயே இருக்கோம்... it is just a by product of genetical interest, effortlessly leading by an innate behavior.
*****************************************************************
நேற்று எப்படி தன்னலமற்ற மரபணு நம்முள் கடத்தப்பெற்று அனிச்சையாக தன் இனம் சார்ந்து செயல்படுதுங்கிறதை பத்தி பேசினோம். இன்னிக்கு இன்னொரு கோணத்தில இந்த பிறருக்கு உதவும் இயல்பு (altruism) எந்தளவிற்கு மனித சகோதரத்தில் முன் நிற்கிறது நிக்கலைன்னு இன்னும் கொஞ்சம் கிட்டே போயி பார்ப்போமா!
சில வருடங்களுக்கு முன்பு ஹிமலயாவிற்கு பக்கத்தில சாமீ கும்பிட போன மக்காவை திடீர்னு பேரிரைச்சலோட மேகம் வெடித்து கொட்டின மழை, வெள்ளமா மாறி மக்களை அடிச்சு எடுத்துகிட்டு போனதா செய்திகள்ல படித்தோம்.
அதில யாரு என்னான்னு தெரியாம அடிச்சு இழுத்துகிட்டு போன பிற வீட்டு மக்காவை குதிச்சு காப்பாத்தினதாவும் சில செய்திகள் வாசிச்சோம். அது போலவே சென்னை வெள்ளம், சுனாமி நிகழ்வுகளின் போதும் நடந்தது.
இருப்பினும் அதற்கு மாறாக மரபணு ரீதியாக இயற்கை எதனை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சேர்க்கிறதுன்னு பார்த்தா- ஒரே குடும்பத்தில் அம்மாவின் வளர்ப்பால் வளர்த்தெடுக்கப்படுகிற சகோதரர்கள் அதனை பார்த்து வளர்வதாலேயே தான் அந்த பாசப்பிணைப்பு அதீதமாக பதியவைக்கப்படுகிறதாம். அது தூரம் அதிகமாக அதிகமாக அதனுடைய ஈர்ப்பு குறைகிறதாம்... உதாரணமாக சித்தப்பா, பெரியப்பா மக்கள் இப்படியே இது விரிகிறது.
இதனை இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் காட்டிற்குள் செல்வோம். சிம்பன்சிகள் புரத தேவையையொட்டி தனது குட்டிகளுக்கு கொண்டு வரும் இரண்டு கிலோ மாமீசத்தில் பங்கு பிரித்து பிற பெண் சிம்பன்சிகள் பெற்ற குட்டிகளுக்கும், தன்னுடைய குட்டிகளுக்கும் ஒரே அளவில் பிரித்து கொடுத்து தனது தாராள மனதை காட்டும் பட்சத்தில், அந்த குணமே தனது குட்டிகள் ஊட்டச் சத்து குறைந்து மரணிக்கும் தருவாயில் கொண்டு சென்று நிறுத்தினால், இயற்கை எதனைத் தழுவி அடுத்த கட்டத்திற்கு கடத்தும்? தாராள உள்ளம் படைத்த அந்த அம்மாவையா? அல்லது கொஞ்சம் சுயநலமாக தனது குட்டிகளுக்கு அதிகமாக கொடுக்கும் அம்மாவையா? மாற்று கருத்தே இல்லாமல் கொஞ்சம் சுயநலத்துடன் இயங்கும் அம்மாவின் குணத்தைத் தான் இல்லையா?
அப்படியே இப்போ கேமராவை நம்ம வீட்டிற்குள் நகர்த்துங்க. வெளியில இருந்து வந்து இணையும் இரு வேறு நபர்கள் தங்களது குழந்தைகள் என வரும் பொழுது ஒரே நிலையையும், ஆனால், அவரவர்களின் பெற்றோர், சகோ என்றால் ஒரு நிலையையும் எடுக்கும் லாஜிக் ஏன் என்று புரிகிறதா? ஏனெனில், அங்கே தூரம் தூரமாக வளர்ந்து வருவதால் அந்த பாச பிணைப்பு இருக்க வேண்டுமென்ற ’தூரப் படுத்தல் மரபணு’ அந்த விளையாட்டை நிகழ்த்துகிறது. அது அவர்களாகவே செய்யவில்லை, அனிச்சை செயல் (உஷ் அப்பாடா, தப்பிச்சீங்க).
இப்படி எல்லாத்தையுமே ஒரு மிருக நிலையிலிருந்து நம்மை புரிந்து கொண்டால் எல்லா மனிதர்களையும் நேசிக்கலாம், அவங்கவங்க நிலையிலேயே வைத்துன்னு நினைக்கிறேன்.
இன்னொரு கொசுறுச் செய்தி. ஆண்களுக்கு குடும்பம் என்ற கருதுகோளே கிட்டியிருக்காதாம் அவர்கள் சகோதர/ சகோதரிகளிடன் வாழ்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காத பட்சத்தில்... அங்குதானே பகிர்ந்து கொள்வது, இரக்கம் காட்டுவது, விட்டுக்கொடுத்து போதல் போன்ற நடைமுறை விசயங்கள் கூர் தீட்டப் படுகிறது.
Posted by Thekkikattan|தெகா at 8:40 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, காடும் நானும், சமூகம், படிமலர்ச்சி, பரிணாமம்













