சங்ககாலம் தொட்டு தமிழர்களுக்கென்று ஒரு குணம் மணம் இருந்தாலும், அதற்குப் பிறகு பல நூற்றாண்டுகள் பின் தங்கியவர்களை மீட்டெடுப்பார் இல்லாமல் கிடந்த பொழுது திராவிடச் சிந்தனையாளர்களே நம்மை மீட்டெடுத்தார்கள். ஏன் அவர்களுக்கே எனது முதல் வணக்கம் உரித்தாகுகிறது? படிங்க...
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Thursday, December 31, 2020
நான் ஏன் திராவிடத்தைக் கொண்டாடுகிறேன்?
Posted by Thekkikattan|தெகா at 7:53 PM 0 comments
Labels: அரசியல், இந்தியா, சமூகம், செய்தி, தெளிதல் சார்ந்து
ஜாதியவாதிகளை பகடி செய்வது தகுமா?
படிக்கிற வயசில போராட்டம், அரசியல் தேவையா?
அரசியல் ஒரு சாக்கடை. படிக்கிற வயசில என்னாத்திற்கு கொள்கை, போராட்டம், ஆர்பாட்டம்னு "அதே கண்கள்" ரேஞ்சிற்கு நம்ம அந்நியன் சங்கர் பட அரசியல் டயலாக் மாதிரி, மத்யமர் மாதிரி குழுக்கள்ல ஓடும்.
Posted by Thekkikattan|தெகா at 7:43 PM 0 comments
Labels: அரசியல், சமூகம், சீரழிவு, செய்தி, தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், ஜாதி
Monday, May 07, 2018
ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!
Posted by Thekkikattan|தெகா at 10:22 PM 0 comments
Labels: அரசியல், இந்தியா, சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், மொக்கை
Sunday, February 11, 2018
நடுநிலைவாதம் என்ற ஒன்று இருக்கிறதா?
இன்று எனக்கான சார்பு நிலையை எடுத்துக் கொண்டேன். அதற்கான வலுவான காரணங்களுடன். அது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உலக பொது நெறிக்கு பொருந்துமொரு தத்துவ நோக்கில் அமைந்த சார்பு நிலை.
பிழைப்பு வாதத்திற்கென சில நேரங்களில் இந்த நடுநிலை அரிதாரம் மிக்க வசதியாக இருந்து போய்விடுவதுமுண்டு. இதனில் இன்னொரு வகையான மனிதர்களுடனான அதாவது "காலத்தை வாங்கிப் போட்டு திரிதலை கவனிப்பவர்களுடைய" அணுகு முறையுடன் இந்த சந்தர்ப்ப வாத நடுநிலையும் ஊடுருவ வசதியாக இருப்பதால் பிழைப்பு வாத பேச்சுக்களுக்கு இடம் அமைத்து கொடுத்து விடுகிறது.
எதன் பொருட்டும் கருத்து இல்லாத மனிதர்கள் இருக்கக் கூடுமா? இடம், பொருள் வைத்து பேசுவதையன்றி வேறு என்ன நம்மை தடுத்து விட முடியும்?
இல்லன்னா குறள் சொன்ன சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் நெறியை நடுநிலைவாதிகள் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? இல்லை கள்ள மெளனம் is being practiced for convenienceகாகன்னு எடுத்துக்கலாமா?
Posted by Thekkikattan|தெகா at 12:41 PM 0 comments
Labels: அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள்
Sunday, August 28, 2016
சுமத்தலின் வலி...
ஒரிசாவில் ஒரு கணவர் தனது இறந்து போன மனைவியின் பொட்டலத்தை சுமந்தவாறு நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார்... தனது மகளும் கூடவே நடந்து வருகிறார்; அவ்வப்பொழுது மகள் உடைந்து அழுகிறார். கணவர் வீதியெங்கும் கடந்தகால போராட்ட வாழ்வை தனது மனைவியுடன் சேர்ந்து சமர் கொண்டதை அசை போட்டுக் கொண்டே அந்த பணிரெண்டு கிலோமீட்டரை கடந்து ரியோ ஒலிம்பிக்கில் ஹுசன் போல்ட் கூட தவழ்ந்து கடக்க முடியாத துயர தூரத்தை நடந்தே கடந்து விட்டார்.இதனைக் கண்டு கொதித்த நெட்டிசன்களும், பொது மக்களும் பல விதமாக தங்களுடைய கையாலாகாத புலம்பல்களை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், ஓவியமாகவும் தன்னிச்சையாக எழும்பும் உணர்ச்சிகளின் பொருட்டு பொங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
அது போன்ற பொங்கலைத் தவிர வேறு என்ன பெரிதாக அவர்களால் செய்து விட முடியும்? கடந்த எழுபது ஆண்டுகளில் இது போன்ற எத்தனை பொங்கல்களை நாமும் கண்டு இன்று இந்த 3ஜி, 4ஜி, ப்ராடுபாண்ட் யுகத்திற்குள் நம்மை புகுத்தி வைத்திருக்கிறோம்.
சிறு மிளகு பொங்கலாக என்னுடையது எதுக்காக என்றால், இந்த சீற்றம் கொண்ட மக்களில் பெரும்பகுதியானவர்கள் என்னையொத்தவர்கள். கிராமப் பின்னணியில் விசயங்களை நேரடியாக பார்த்து அனுபவித்து வாழ்ந்தவர்களாக இருக்கக் கூடும். பொங்கல் வாதிகளில் சில பேருக்கு இது ஒரு சைக்கோசோமடிக் அன்சைட்டி. பல பேருக்கு தங்களது மனசாட்சியின் ஓலம்.
முரணாக, இந்த நிகழ்வையும் எப்பொழுதும் போல 2020ல் வல்லரசாக்க முன்னேற்றத்தில் கொண்டு போகும் பெரும் கம்பளிகளைக் கொண்ட நகர் புற சுகவாசிகள், நின்று நிதானமாக இந்த நிகழ்வை பார்த்து தீர்ப்பு எழுதுகிறார்கள்.
இது ஒரு தேசமாக தோல்வியடைந்தோம் என்று பார்க்கக் கூடாது, பொட்டலத்தை தூக்கிச் சென்றவருக்கு கடன் வாங்கும் தகுதியோ, அல்லது அவரைச் சுற்றி இருந்த மக்களின் குறையே இது என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆருடம் கூறு கிறார்கள்.
மாறாக கொதித்து எழுந்து இங்கு உணர்சிகளை வெளிப்படுத்தும் கிராம வாசிகளையொத்தவர்கள் தங்களின் கண்களுக்கு முன்னால் அந்த கணவரின் கால்கள் பூமிக்குள் புதைந்து பிணமாக கனக்கும் தனது மனைவியை அடுத்த அடியை இழுத்து சுமப்பதின் வேதனையை மிகத் துல்லியமாக உணர முடிந்ததாலோ என்னவோதான் அவர்கள் அப்படியாக பொங்குகிறார்கள்.
நான்கு பேர்களாக தூக்கிச் சென்று மயானத்தில் உதவக் கூட தனது தோள்களை கொடுக்காத எந்த ஒரு உள்ளத்தாலும் அந்த பொட்டலத்தின் கனத்தை அறிந்து கொள்ளவே முடியாது. எல்லா வியாக்கியானங்களையும் தூரத்தில் இருந்து நிதானமாக இருபது ரூபாயில் ஒரு குடும்பமே வாழ முடியும் என்று ஏழ்மையைக் கூட அழகியலாக்கும் பிறரிடத்தில் வேறு என்னத்தை தான் எதிர்பார்க்க முடியும்?
செத்து மடிந்து மயானத்தில் சாம்பலாக போகக் கூடிய கட்டையிடத்தில் கூட தீண்டாமை கருதி நான்கு கிலோமீட்டர் சுத்தித் தானே எடுத்து செல்லக் கூடிய மனிதத் தன்மையில் இருக்கும் ஊர்களையும், இருபது ரூபாய் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையென கூலி வேலைக்கு செல்லும் தம்பதியினரை வழி மறித்து கழுத்தறுத்து கொல்லும் மனிதத்தையும் கொண்டவர்களாத்தானே நாம் பரிணமித்து நிற்கிறோம்.
ஒரு பக்கம் பகட்டு, மறு பக்கம் கும்மிருட்டு! நிதர்சனத்தை பொய்மை தின்னப்பார்க்கிறது, விளைவு போர்க் களத்தில் காணக்கிடைக்கும் காட்சிகள் போல இன்று அன்றாட நிகழ்வுகளாக இது போன்ற மனதை உலுக்கும் காட்சிகள் நம்மைச் சுற்றி நிகழ்வுறுகிறது. நாமும் கண்ணுற்று அனிச்சையாக மனம் மரத்துப் போன நிலையில் கடந்து செல்ல நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறோம்.
நன்றி: படம் - பாரதி தம்பி.
Posted by Thekkikattan|தெகா at 12:26 AM 1 comments
Labels: இந்தியா, சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள்
Sunday, January 24, 2016
பயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்!
சில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.
அதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.
சரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.
நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.
நம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.
இந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.
தொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.
ஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.
இங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.
வயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள்.
Posted by Thekkikattan|தெகா at 12:35 PM 0 comments
Labels: தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், நினைவோடை, மதங்களும் நானும்
Tuesday, January 19, 2016
நட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism!
ரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.
அவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.
இந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது? மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது? அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா?
இல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.
சமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.
கிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.
அவன் எவர்களை எதிர்த்து போராடினான்? எதற்காக போராடினான்? தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது? நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்?
தன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்?
ஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.
அவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.
இந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.
தான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.
ஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.
எது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சமூகத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.
நட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”
ஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு! இது ஒரு சமூக அவலம்!! வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா!
P.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்
Posted by Thekkikattan|தெகா at 6:33 PM 0 comments
Labels: அரசியல், அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், நோய், ஜாதி
Friday, December 25, 2015
அகவய நட்பற்ற பெரியாரும், ராஜாஜியும்...
நான் கேட்ட கேள்வி அதில என்னான்னா, பெரியாரும், ராஜாஜியும் ஒருவர் தட்டில இருந்து இன்னொருத்தர் எடுத்து சாப்பிடுற அளவிற்கு நண்பர்களாக இருந்தும், பெரியார் கடைபிடித்த பிரபஞ்ச பொது விதி ‘மனிதத்தை மதித்தலை’ எதன் பொருட்டு ‘குலக் கல்வியை’ ஆதரித்த ராஜாஜியிடம் அக வயமாக கொண்டு சேர்க்க முடியவில்லை.
இது அரசியல் சார்ந்த ஒரு நிலைப்பாடா அல்லது அகம் சார்ந்த மன மலர்தலில் நடந்த சிக்கலா? அக நக நட்பது நட்பா, அல்லது முக நக நட்பது நட்பா??
இதில் என்னாத்தை பெரிசா நட்பு பாராட்டுதலின் பேரில் கடத்தி சென்று சேர்த்திருக்கிறார்கள்?
இரு வேறு துருவங்களில் கருத்தியல், அகவய வேறுபாடுகளை கொண்டவர்களாகினும்...
அப்போ அந்த இரண்டு பெரிய மனிதர்களுமே தங்களுடைய சகிப்புத் தன்மையின் அடிப்படையில் மட்டுமே நாகரீகம் பொழங்கியவர்களா?
பெரியாரை பொருட்டு எனக்கு ஒரு வருத்தமுண்டு , இத்தனை பெரிய உண்மையை ராஜாஜியிடமே கூட கடத்தி சென்று அவரை விழிப்படைய வைக்க முடியாத நிலையில் நட்பு பாராட்டி இருக்கிறாரேயென...
Posted by Thekkikattan|தெகா at 5:34 PM 3 comments
Labels: அரசியல், அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, மொக்கை
Friday, February 07, 2014
நமக்கும் சிம்பன்சிக்கும் இடைப்பட்ட மனித இனங்கள் எங்கே??
************
மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நமக்கு இடைப்பட்ட மனித பிற இனங்களை இணைக்கும் குரங்குகளை அல்லது மனிதர்களை ஒத்த இனங்கள் காணப் பெறவில்லை என்பது. அதாவது குரங்கு, சிம்பன்சி (வாலில்லா மனித குரங்கு) வகைகளில் இன்று காணப்படுவதனைப் போன்றுங்கிறது கேள்வியா இருக்கும். அதுக்கு எத்தனை விதமா பதில் கொடுத்தாலும் விசயம் சென்று சேருவதில்லை.கீழே உள்ள தொகுக்கப்பட்ட படக்கட்டுரையில் வரும் ஆண்டுகளை கொண்டு நன்றாக கவனித்தால் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளலாம். அதாவது மனித இனத்திற்கு மிக நெருக்கமாக வரும் எதுவும் இன்று சைட் பை சைடாக இல்லை. உதாரணமாக நியாண்டர்தால் கடைசியாக ஐரோப்பாவில் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை வாழ்ந்தது. ஆனால், அவைகள் நம்மை விட மூளை அளவிலும், உடல் பருமனிலும் பலசாலிகளாக இருந்தாலும் நாம் அவைகளை வெற்றி கொண்டோம்.
அதற்கான காரணங்களாக நமது சமூக அமைப்பு, உணவு பழக்கம், கூடிப் பேசி வேட்டையாடும் திறன், உடல் பருமனை மட்டும் நம்பி இருக்காமல் மூளையை செயல்படுத்தும் திறன், சீதோஷ்ண நிலையை நேர் கொண்ட திறன் அப்படி இப்படின்னு பல காரணங்கள் ஏன் நாம முன்னேறி கடைசியா தப்பி பிழைத்து நின்னு இருக்கோங்கிறது இருக்கு.
ஆனால் இந்த போட்டியில் தோல்வி உற்றவைகள் ஏதோ ஒரு வகையில் நம்மை விட திறன் குறைந்ததாகவே இருந்ததால் இந்த தப்பிப் பிழைத்துக் கிடக்கும் ஆட்டத்தில் தோற்று மண்ணுக்கு உரமாகி இருக்கிறது, சில எலும்புகளை மட்டும் விட்டுச் சென்றபடி.
ஏன் நமக்கு மிக அருகாமையில் வரும் சிம்பன்சி வகை மட்டும் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே நம்முடைய பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து சென்றிந்தாலும் இன்றும் கூடவே இருக்கிறதுன்னு கேக்குறீங்களா. நமக்கு அவைக்குமான உணவு பழக்க வழக்கம், வாழ்வமைப்பு, அதன் கம்யூனிகேஷன் திறன், மூளை வளர்ச்சி பெருமளவில் பின் தங்கி இருப்பதே காரணமாக இருக்கிறது (மரபணு மேட்சில நமக்கும் அதுக்கும் 98.5% தொடர்பிருப்பினும்).
அப்போ ஏன் இன்னும் வளராமயே இருக்கிறதின்னு இன்னொரு கேள்வியை போட்டிங்கன்னா- அதற்கான சரியான சூழ்நிலை இன்னமும் தேவைப்படாததும், அவைகளுக்கு தேவையான வாழ்வுச் சூழல் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நாமே அவைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்த பூமியை நமது ஆளுமைக்குள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நம்முடைய சுற்றுப் புறச் சூழல் அழிவுற வைக்கும் திறனுக்கு முன்பு இந்த பரிணாம சுழற்சியின் பெரிய சக்கரம் சுழற்ற போதுமற்றதாகவே பிற உயிரினங்கள் அழிந்து வருவதும் ஒரு காரணமாக இருக்குமென்று எண்ணச் செய்கிறேன்.
We don't give them enough time and space to evolve on its own pace! We alter every single strand of DNA of every living single organisms on this globe!!
Posted by Thekkikattan|தெகா at 10:23 AM 5 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், வாசிப்பாளன்
Friday, August 09, 2013
எனது மறுபக்கம்...: The Flip Side!
*தெரிந்தா செய்கிறார்கள், என்ன செய்றோம்னு தெரியாமச் செய்றதுதானே! காலம் வரும் பொழுது புரிந்து கொள்வார்கள்* .
இந்த காலம் சில பேருக்கு நாட்களாகவோ, மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஏன் இந்த பிறப்பிற்கும் எட்டாத ஒரு விசயமாகவோ கூட அமைந்து விடக் கூடும். இருப்பினும் இந்த நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொளல் தமக்கு தாமே மன அழுத்தத்திலிருந்தும், வெறுப்பு நம்மை ஆட்கொண்டு நமது பொன்னான இக் கணத்தை அனுபவிக்க விடாமல் சிதைத்து விடக் கூடியதிலிருந்தும் நம்மை கரை தூக்கி விடுவதுமாக அமைந்திருக்கிறதாகப்படுகிறது.
நம் வாழ்வில் வந்து போகும் உறவு மனிதர்களையொட்டி எத்தனை பெரிய கால எதிர்மறை செயல்பாடுகள் நடந்தேறும் பொழுதும் இந்த take in நிச்சயமாக உதவுவதாகவே இருக்கிறது.
என்னோட இன்னொரு அம்மா’ [மாமீ’யார் - i hate this term, ஏன்னா அந்த தமிழ் வார்த்தையே பாருங்க மாமி யார் ? என்று போட்டி போடுவதாக அமைந்து பட்டிக்கிறது :) ], அதாவது என்னோட வைஃபை அம்மாகிட்ட இன்னிக்கு ரொம்ப நேரம் காணொளியில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்களும் அதை ரொம்பவே சிலாகிச்சு பேசினாங்க.
“இந்த மாதிரியான ஒரு கணத்தை நமக்கு இந்த காலம் கொடுத்திருக்கின்னா கிடைக்கற்தக்கன என்று.”
பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சில கேள்விகளின் மூலமாக அவர்களுடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் போக்கை நோக்கி நகர்ந்தது. அம்மாவிற்கு ஆறு ஏழு பிள்ளைகள் எல்லாம் முப்பது வயதைத் தாண்டி. தான் தனக்கு என்று தன் பெற்றோர்கள் அரைத்த மாவை தனக்கென அரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் உள்ளவர்கள்.
அம்மாவின் கணவர் ஓர்
இருப்பினும் இந்தம்மாவின் தன்னம்பிக்கையும், அந்த நாகரீகமும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிற நிலையில் இந்த கேள்வியை முன் வைத்தேன். ஏன் உங்களுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் தனியாக வசிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டவுடனேயே வெடித்து சிரித்து தன் அனுபவத்தை முன் வைக்க தயாராகினார்கள்.
“எத்தனைதான் நமக்கு சேவகம் பண்ண, கவனிச்சிக்கன்னு ஆட்கள் இருந்தாலும், நமக்கு பிடிச்ச இடத்தில உட்கார்ந்து எழுந்துன்னு, பிடிச்சதை பிடிச்ச நேரத்தில செஞ்சிகிட்டு வாழுறதுல உள்ள சுகம் கிடைக்குமா தம்பீ” என்பதே அம்மாவினுடைய பதிலாகக் கிடைத்தது.
எத்தனை வாழ்வு அனுபவங்கள் அவர்களை இந்த ஒரு புரிதல் நிலைக்கு நகர்த்தி இருந்தால் தன்னுடைய எழுபதைத் தொட்டு நிற்கும் ஒரு மனுஷியின் எண்ணமாக இது வெளிப்பட்டிருக்கக் கூடும்.
நான் அதன்பால் கட்டுண்டேன். என்னுடைய ஈர்ப்பு- மனிதர்களின்பால் சார்பற்ற நிலையில் மனிதர்களுடன் ஒட்டி ஒழுகுதல், அது வயது நிலைகளையும் கடந்து யார் வெளிப்படுத்தினாலும் அந்த மனிதர்களுக்குள் ஏதோ வெட்டி எடுக்க புதையல் இருப்பதாக கூடுதல் ஒட்டல் ஏற்படும்.
பிறகு அம்மாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி விட்டு, நீங்கள் எடுத்திருப்பதும் ஒரு தேர்வுதான். தனது திருமண நாளிருந்தே, குடும்பம், கணவர், பிள்ளைகள் என்று அடுத்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வை தோய்த்த நிலையில் கடைசி ஒரு கட்டத்திலாவது தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தீர்க்கிறேன் என்று எடுத்திருக்கும் இந்த தேர்வை நான் மதிக்கிறேனம்மா.
இருந்தாலும் இன்னும் காலங்கள் நகரும் பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உள்ளார்ந்த மனசக்திக்கு உடம்பு ஒத்துழைக்காத ஒரு நாளும் வரக் கூடும். அப்படியாக வரும் ஒரு நாளில் அடுத்த ஒரு தேர்வை நீங்கள் எடுக்கும் பொழுது, எனக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள் என்று கூறினேன்.
ஏனெனில் அந்த வாய்ப்பை வழங்குவதும், வழங்காமல் போவதும் அவர் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்களிலே உள்ளது. இது எப்படியாக இருக்கிறது என்று சற்றே உள்ளே புகுந்து யோசித்தால், எந்த வீட்டில் எந்த மனிதர்களுடன் நாம் விருந்தாடப் போகிறோம் என்று வாய்ப்பளித்துப் பார்ப்பதற்கு ஒப்பானாது.
தீர்க்கமாக வாழ்பவர்களுக்கு அங்கே எந்த விதமான சமரசங்களுமில்லை. சுத்தமான தேர்வு மட்டுமே மீதமாகிறது. அங்கே இது போன்ற மனிதர்கள் புகுந்து வெளி வரும் பொழுது விருந்தளிப்பவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
அதுனாலேயே நான் மிகக் கவனமாக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இன்று ஒரு வாழ்ந்து தீர்த்தவளின் வாயிலிருந்து சில நல்ல வார்த்தைகளை வாழ்த்தாக பெற்றேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிதான நாளாக அமைந்திருக்கிறது!
சந்தோஷத்திலேயே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு ஒப்பான விசயம் வேறொன்றும் இருப்பதாகப் படவில்லை. அது இந்த மிர்சிடீஸ் வகையாறா கார்களையும், சம்ஷாங் s3 and s4 வகை கைபேசிகளையும் விட அதி மன மகிழ்வை ஊட்டுவதாக உள்ளது.
சீக்கிரம் விழித்துக் கொள்பவர்களுக்கு இந்த வாழ்வு ஏதோ ஒரு வகையில் எப்பொழுதுமே மட்டற்ற சந்தோஷத்தை வழங்க காத்துக்கொண்டே இருக்கிறது!
Posted by Thekkikattan|தெகா at 2:58 PM 2 comments
Labels: அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், முதுமை
Tuesday, January 29, 2013
விஸ்வரூபம் - படத்திற்கான விமர்சனமல்ல!
இந்த கட்டுரை பேசப்போவது கமல்ஹாசனின் விஸ்வரூபமான ”கேளிக்கை” படத்தை பற்றிய விமர்சனமாக இல்லை. அந்த படத்தை இப்பொழுது என்னால் பார்க்கக் கூடிய வாய்ப்புமில்லை. தேடி ஓடி பார்க்கும் அத்தனை தீவிரமான சினிமா ரசிகனுமில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் நடக்கும் கட்டிப் புரதல்களை கண்ணுற்று அங்குமிங்குமாக ஓடி என்னுடைய பார்வையை வைத்தும் மனது கேக்காததால் சில விசயங்களை எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்ள இங்கு பதிந்து வைக்கிறேன்.
நான் கமலைப் பற்றி பல பதிவுகளில் சிலாகித்தும் அவர் அப்படித்தான் என்ற தனிமனித வெளிப்பாடுகளை பாராட்டியும், அவர் திரையுலகில் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொள்ள எடுக்கும் மெனக்கெடல்களையும் பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். அப்பொழுதும் தனியாகவே நின்றதாக ஓர் உணர்வு, இப்பொழுது இந்த படத்தின் சர்ச்சையை ஒட்டியும் தனித்தே இருப்பதாக ஓர் உணர்வு! ஆனா, இன்று அவருக்கு சேர்ந்திருக்கும் கூட்டம் பெரும் கூட்டம். இங்கேதான் அவர் நின்று நிதானித்து தனது மேற்கொண்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவர் இரண்டு வழிகளில் ஒரு குன்றின் உச்சத்தை அடையாளம். ஒன்று, பழனி மலையில் ஏறுவதற்கு விஞ்ச் ஏற்பாடு செய்து அலுங்காமல், குலுங்காமல் போய் ஆயிரம் ரூபாயை சிறப்பு தரிசனத்திற்கென யார் கையிலாவது வைத்து திணித்து எல்லாரையும் குறுக்காக நடந்து மிடுக்காக போய் அந்த வேலவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு வரலாம். இல்லையென்றால், அரைநாள் முழுக்க வரிசையில் நின்று தனக்கு முன்னாலும், பின்னாலும் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டே ஒவ்வொரு அடியாக முன்னேறி உண்மையான உள்ளொளி பெற்று கடைசியில் உச்சத்தை அடையாளம். அது அவரவர்களின் தேர்வு!
உலகிலேயே ரெண்டாவது பெரிய இஸ்லாம் வாழ் மக்களை உள்ளடக்கியது இந்தியா. நாம் ஒன்றும் அமெரிக்கா இல்லை. இங்கே நாம் இரண்டற பின்னி பிணைந்து கிடக்கிறோம். இருவரும் ஒத்திசைவுடன் இயங்குவதின் அவசியம் மிக நுண்மையாக மெதுவாக ஆழப் பதிக்கப்பட வேண்டியதின் அவசியம் உணருதல் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
Posted by Thekkikattan|தெகா at 9:27 AM 10 comments
Labels: அரசியல், அனுபவம், சமூகம், தீவிரவாதம், தெளிதல் சார்ந்து, வன்முறை
Wednesday, June 06, 2012
உள்ளொளி
நான் உனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்
முதலில் யார் கண் சிமிட்டுவதென
தூரத்தில் நின்றபடியே நீ வியர்த்து அடிபெருக்கும்
பொழுதெல்லாம்
நான் உயரத்தில் குறைந்திருந்தேன்
கருமையை நீ உண்டு கொண்டிருக்கும் வேளையில்
உனதிருப்பை நான் அழகாக்கிக் கொண்டிருந்தேன்
உனையுருக்கி உன் வாதையின் உக்கிரக் குழி பறிக்கையில்
அப்பொழுதும் அசையாமல் உன் அகம் காட்டியிருந்தேன்
தரை துடைத்து ஊண் திரட்டி பலமாக பெருமூச்செறிந்தாய்
கரும்புகை நாசிதொட புறவுலகம் முகம்சுழிக்க
போதுமென
புன்னகைத்தே இருள்துழாவி எனதுடலாக்கினேன்!
P.S: Discussion in Buzz ...ULLoLi...
Posted by Thekkikattan|தெகா at 12:03 AM 4 comments
Labels: அனுபவம், கவிதை, கவிஜா, தெளிதல் சார்ந்து
Thursday, November 18, 2010
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...
தொடர்ந்து பதிவுகளா கொடுப்பதாக இந்த வாரம் அமைந்து போனதிற்கு வருந்துவதா? மகிழ்ச்சி கொள்வதா? பொதுவாக பழக்க போதைக்காக பதிவு எழுதுவது என்பது என்னிடம் இல்லை, சராசரியாக ஆண்டிற்கு 25 பதிவுகளே பதிந்து வருகிறேன். அது போன்ற பதிவுகளும் உள்ளிருந்து கொப்பளித்து வெளிக் கிளம்பும் வாக்கில் அமைந்தாலே உண்டு.
எண்ணங்கள் தவிர்க்க முடியாத வழியில் ஒரு குழந்தை முட்டிக் கொண்டு தாயின் மடியிலிருந்து வெளிவருவதாகவே எனது கட்டுரைகளும் இருந்தாலே ஒழிய அது வெளி உலக பார்வைக்கு கிடையாது. அப்படியாக உறங்க போட்ட கட்டுரைகளும் என்னிடமுண்டு. எதற்காக இதனை இங்கு முன் வைக்கிறேன் என்றால் தொடர்ந்து பதிவுகளை கொடுத்து திகட்ட வைத்து விடக் கூடாதே என்பதின் அடிப்படையிலேயே. நோ மோர் சுய புராணம்!
இந்த வாரத்தில் பல பதிவுகள் அவரவர்கள் பார்வையில் எது ஒழுக்கம்/பண்பாடு/பாரம்பர்யம்/கலாச்சாரம் என்று முன் வைத்து தன் தனது குதிருக்குள் எது போன்ற ஊறல்கள் இருக்கிறது என்பதனை மூடியை அகற்றி காமித்துக் கொண்டார்கள். என்னுடைய பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலும், அவர்களைத் தாண்டி எனக்கு கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் பெறப்பெற்ற உலக ஊடாட்டங்களைக் கொண்டும் எது போன்ற மன முதிர்ச்சியை, விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அப்படியே இல்லையெனில் கேள்விப்படும் அல்லது அந்த சமயத்தில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயங்களில் தலையை குனிந்து கொண்டு அதில் என்ன இருக்கிறது ஏன் என்னால் என் மன உலகை அந்த விசயம் சார்ந்து விரித்துக் கொள்ள முடியவில்லை என்ற பாங்கில் உள்ளரயே குமைந்துக் கொண்டு, காணாங் கோழியாகிவிடுவேன்; நன்கு புரிந்துகொள்ளும் வரையில்.
இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகளும், அது இயங்கும் தன்மையும் ரொம்ப விசிச்சிரமானது. எப்படியான வளைவுகளில் எது போன்ற ஆச்சர்ய விசயங்களை நம் வழியில் போட்டு அதனை புரட்டிப் போட்டுவிட்டு மேற்கொண்டு நம் பயணத்தை உந்தி தள்ள சவால் விடப் போகிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை.
அது போன்ற சவால்கள் மரணம் என்பது எவ்வளவு நாம் ஒவ்வொருவருக்கும் நிச்சயதாம்பூலம் செய்யப்பட்டு எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் ஒரு கொண்டாட்டமோ அது போலவே இது போன்ற வாழ்வின் சவால்களும் வந்து போகும். நாம் வளரும் பொழுது, அதிர்ஷ்ட வசமாக பொறுப்பான பெற்றோர்களை பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த சமூக அறிவைக் கொண்டும், தானே வளர்த்தெடுத்துக் கொண்ட சுய அறிவையும் கொண்டுதான், தன் குழந்தைகளுக்கு வாழுமிடம், சூழல்களின் வழியாக கையிறக்கம் செய்து கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த பெற்றோர்களுக்கும் ஓர் அறிவுசார் எல்லை இருக்கிறது. அதனைத் தாண்டி தான் பெறாத அறிவையும், பேரையும், புகழையும் அடையவே பொறுப்பாக நின்று தனக்கு சரியென பட்ட விசயங்களைக் கூறிக் கொண்டே தன் பெற்ற கல்வியை விட தன் குழந்தைகளுக்கு சிறப்பாக அமையுமாறும், தாங்கள் புழங்கிய மனிதர்களைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக அறிவில் சிறந்த மனிதர்கள் உலவும் உலகில் சங்கமித்து பரந்து விரிந்து வன்முறையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அவர்கள் சந்ததியை பெருக்க வேண்டுமென்று நினைத்தே அவர்களுக்கு கிடைக்காத அத்தனை வாய்ப்புகளையும் மறந்து/மறுத்து குழந்தைகளுக்கு வழங்கியே வாழ்ந்து விடுகிறார்கள், இல்லையா?
பெற்றோர்களுக்கும் அறிவுசார் எல்லைகளைக் கொண்டு என்று வரும் பொழுது, அவர்களுக்கு எட்டிய வளர்ச்சியைக் கொண்டே அவர்களால் தனக்கு வழங்கப்படும் வாழ்வின் சவால்களுக்கு விடையளிக்க முடியுமல்லவா? இது ஒரு சின்ன லாஜிக். தனது மகன்/மகள் தன்னைக் காட்டிலும் இன்னும் பெரிய பல்கலையில் பயிலும் வாய்ப்பைப் பெற்று, அறிவிலும், அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் உலக/மனித அனுபவம், வெளிநோக்கு (exposure) தளங்களைக் கொண்டு தன் இருப்பை கூடுதலாக ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும் நிலையை எட்டிய பிறகு எப்படி அந்த மூளை இன்னமும் தனது பெற்றோர்களின் அறிவு சார் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்து விட முடியும்?
அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள்.
இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.
சில சமயங்களில் இந்த உலகம் பூராவும் வாழ்க்கையில் பக்குவ மடைந்த மனிதர்கள் கல்வியறிவே இல்லாது போனாலும் ஒரு அன்னை தெரசா ரேஞ்சிலேயோ ஏன் அப்படி, குறைந்த பட்சம் மனிதாபிமான முள்ளவர்களாக, தன் மனசாட்சியைக் கேட்டு தனக்கு நேர்ந்தால் (what if...) என்ற அடிப்படைக் கேள்வியை கேட்டுக் கொள்ளும் நல்லவர்களாகிப் போய்விடுகிறார்கள். அவன் கைக்கு மீறி நடந்த ஒரு நிகழ்விற்காக அவன் கழுத்தில் நான் கத்தியை வைக்கிறேனே, நாளக்கி இதே போன்று என்னால் எடுக்கப்படாத ஒரு முடிவிற்காக என் கழுத்தில் அவன் கத்தியை வைத்தால்.... (அப்படியாக யோசிப்பது...)
ஊரில் ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரு தரபட்ட பெற்றோர்களை வைத்து பார்க்கலாம். ஒரு பெண் தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து செய்யப் போகும் திருமணம் பிடிக்காமல் தனக்கு பிடித்தவனுடன் நடையைக் கட்டி விடுகிறாள். அதுவும் திருமணத் தேதியெல்லாம் குறித்து பத்திரிக்கையும் அடித்து விநியோகித்து என்ற காலகட்டத்தில். இப்பொழுது இது வெளியில் தெரிய வருகிறது, வளர்த்தெடுத்த குடும்பத்திற்கும், தாம்பூலம் போட்ட குடும்பத்திற்கும் பிறகு சம்பந்தமே இல்லாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் ஊருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் படிப்பறிவே இல்லாத பெற்றோர் # 1) தனது பிள்ளைகளுடன் இரவு உணவை உண்டு கொண்டே சம்பாஷிக்கிறார்கள்... நன்றாகத்தானே போயிக்கொண்டு இருந்தது எப்படி பெத்தவங்களுக்கே தெரியாமல் இப்படி நடந்து போனது, இன்னும் கூடுதலாக அவரின்/ளின் அப்பா நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கலாம், அவள்/னுடன் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம், வீட்டில் உரையாடுவதற்கு கூடுதலாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கலாமென்று லாஜிக்கல் விசயங்களின் பொருட்டு பேசிக்கொண்டே... ம்ம்ம் என்ன பிரச்சினையோ நமக்குத் தெரியாது. பாவம்! எவ்வளவு மனக் கஷ்டமோ இப்பொழுது...
குடும்பம் # 2) நல்ல படிப்பறிவும் வெளி நோக்கு பார்வையும் இருந்தாலும் அந்த பண்பாடு என்ற வஸ்து விழிப்புணர்வு கிடையாத பெற்றோர்கள். அங்கு தினமும் அடுத்த குடும்பங்களைப் பற்றிய பொரணிபேசுதல் அவர்களின் பொழுது போக்கு. அதனில் குழந்தைகளும் தெரிந்தோ தெரியாமலோ காது வழியாக கேட்டு பழகி பிறகு தானும் கலந்து கொள்ளும் அளவிற்கு வந்த குடும்பம். அங்கும் இது போன்ற ஒரு உணவு கூடல் - அங்கும் மேற் கூறிய நல்லொழுக்க அடிப்படை குறிகளைக் கொண்ட குடும்பத்திற்கான அதே சம்பாஷணை. அங்கு பெற்றோர்கள் சொல்கிறார்கள் - காதலனுடன் நடையைக் கட்டிய பெண்ணின் அம்மா பொறுத்தான முதல் விமர்சனம் ’அவ, பொம்பளையா அவ, சரியான ஓடுகாலிய பெத்து வைச்சிருக்கா’ இப்போ அப்பா சொல்லுறார் ’நானா இருந்த்த்தாஆஆஆ அந்த பொண்ண கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்...’ அப்படியே தொழு நோயாளி/மனப் பிறழ்வு சூழ்நிலைக்கும் இது போன்ற முரட்டு வைத்தியம் ‘இவிங்கள எல்லாம் தெருவுக்குள்ளர விடாம கூடியடிக்கணும்... சகிக்கல’ அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்திடும்.
இப்போ பேசுவோம். இந்த இரண்டு குடும்ப சூழல்களில் வளர்ந்த பிள்ளைகள் எந்தந்த சூழ்நிலைகளில் எது போன்ற ரியாக்ஷன்களை முன் வைப்பார்கள்? அந்த அடிப்படை சம்பாஷணை விதைத் தூவல் இரு வேறு உலகங்களாக பரிணமிக்கிறது ஒவ்வொரு தனிமனித சமூக வெளி நோக்கிலும், இல்லையா? அப்பொழுது, வாழ்க்கை தன்னை விட பெரிது, சூழ்நிலைகளை அது பாட்டுக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறது, #2வில் அந்த அப்பா சொன்னதைப் போன்று ...அந்த பொண்ணை கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்னு.... சொன்னதிற்கு இணங்க அவர்களின் பிள்ளைகள் நாளக்கி இது போன்று ஒரு சம்பவம் யாருடைய குடும்பத்திலோ நிகழப் போக அதே வார்த்தையை உதிர்ப்பார் அல்லது தனக்கு தன் பிள்ளை தன்னை விட அறிவுசார் தளத்தில் எங்கோ போய் நிற்கின்றது இவரால் ஜுரணிக்க முடியாத ஒரு கருத்தியலைக் கொண்டு வருகிறது அப்பொழுது, வெட்டிப் போட்டுவிட்டு சிறைச்சாலைக்கு அவர் சென்று விடுவாரா, அல்லது தானே விஷமருந்தி மரணத்தை கட்டி பிடித்துக் கொள்வாரா?
மீண்டும் இங்கேதான் அந்த பெற்றோர்களின் அடிப்படை உரையாடல் பிள்ளைகளிடத்தில் கைகூடி மிக்க நலன் பயக்கிறது. தன் சக்திக்கு மீறிய தனிக் குடும்ப நிகழ்வுகள் தன்னைச் சுற்றி நிகழும் பொழுது (முட்டாள் தனமான, எதிர்மறை எண்ணங்களை கொட்டுவதை தவிர்க்க), what if... கேள்வியைக் கேட்டு மூர்க்கமான தன் சினத்தை மூக்கணாங்கயிறு போட்டு அடக்கிக் கொள்வதின் பொருட்டு அந்த அடிப்படைக் கல்வி உதவ வேண்டும். தன்னை விட பெரிய நிகழ்வு அது வெளியில், ஆனால் அதற்காக தான் முட்டி தேய உழைத்து உருவாக்கிய/வளர்த்த பிள்ளைகள் தன் வாழ்க்கை அளவை விட Outgrow ஆகி நிற்கிறார்கள் என்பதனால் தன் குடும்பத்தை நிந்தித்து கொள்வது எப்படி சமயோசிதமாக யோசிக்கும் மண்டைக்கு சாத்தியம்?
எனவே, முடிந்தளவிற்கு குழந்தைகளுடன் கிடைக்கும் ‘வாய்ப்புகள்’ தோரும் நல்ல ’யுனிவெர்சல் ஒழுக்கம் சார்ந்த’ உரையாடல்களை நிகழ்த்துங்கள் அது பின் வரும் காலங்களில் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் யாரையும் தனி மனித குடும்பங்களில் மூக்கை நுழைத்து பரிகசிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை தொடராத வாக்கில். அதுவே ஆரோக்கிய வாழ்வு உனக்கும், எனக்கும் ஒரு சமூகத்திற்கும் ஏன் இந்த உலகிற்குமே!!
பி.கு: அண்மையில் இந்தக் கட்டுரை எனது பெற்றோர்களுடன் உரையாடும் பொழுது கருவாக உருவானது. இங்கே அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல், உங்களுக்காகவே!!
Posted by Thekkikattan|தெகா at 11:25 AM 69 comments
Labels: அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள்
Tuesday, November 16, 2010
நான் ஏன் வலைபதிகிறேன்: சுயசொரிதல்...
ஓ! பாய்!! எங்கிருந்து இந்த பகுதியை நான் ஆரம்பிக்கிறதிங்கிறதிலேயே ஜாங்கிரி சுத்துற அளவிற்கு விசயமிருக்கு. ம்ம்ம் நான் பதிவ எழுத ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகிப்போச்சப்போய்... எனக்கு இந்த கணினியில தமிழ்ல கூட எழுத முடியுங்கிறதை நானே தட்டு தடுமாறி விழுந்து, அங்க நின்னு இங்க நின்னு கடைசியா இந்த வலைப்பூக்கள், பிறகு தமிழ்மணம் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா என் சொந்த தேடல்ல (இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) இங்க வந்து விழுந்தேன்.
ஏன் அப்படி நிகழ்ந்ததுன்னா, ஏதோ ஒண்ணு இன்னும் நிறைய மனிதர்கள்கிட்ட இருந்து கத்துக்க இருக்கின்னு தேடித் தேடி கண்டம் கண்டமா பராக்கு பார்த்திட்டு கத்துக்கிட்டு வந்தாலும், நம்ம மக்கள், நமக்கு நெருக்கமானவங்க எப்படியா உரையாடிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னு வாரது இயற்கைதானே? அதானே சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாத இடமின்னாலும் இதுக்குள்ளர கெடக்கணும்னு ஒரு உறுதியும் கொண்டு அதுவும் நானே எடுத்துக்கிட்டது (இல்லன்னா, நான் விலகுகிறேன்னு பதிவ போடச் சொல்லும்...), யாரும் எனக்கு அறிவுரை கொடுக்கல. இங்க இருக்கவங்க யாரு என்னான்னு கூட அறிமுகப் படுத்தி அதுக்குப் பிறகு எழுந்து நடக்கவோ, தவழவோ சொல்லிக் கொடுக்கல. புதிசா வாரவங்க நிறைய பேரு நிறைய பக்க பலத்தோட, பின்னணியோட இப்பொல்லாம் வருவதனையும் அவதானிக்கிறேன்.
எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில என்னோட அறிவு தளத்தில யார், என்ன சொல்லுறாங்க, எங்க உண்மை இருக்கு, எங்க பாசாங்கு நிரம்பி இருக்கு, எங்க சும்மா நேரத்தை கொல்ல யாகூ, கூகுள் சாட் அறையில இருந்து நேரடியா இங்க வந்து பழகிக்கிறதுக்கு மட்டும் இருக்காங்கன்னும், அதனைத் தாண்டி எப்படி மரணத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்தவனாக, வாழ்க்கையையும் வாழ்ந்து, புரிந்து கொண்டவர்கள் யார் என்பதனையும் என்னளவிலான புரிதல்களோட மேலும் வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக எனது ஐந்து வருட வலையுலக வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். இங்கு பல வலையுலகப் போர்களை பார்த்திருக்கிறேன், பல மனிதர்களின் நிறங்களைக் கண்டிருக்கிறேன், அவர்களுக்கான அங்கீகாரப் போரில் வாழ்வின் காலத்தினையும், தேய்வினையும் கண்டுணர்ந்ததிருக்கிறேன்.
இது எப்படி இருக்கின்னா எனக்கு, இப்படியாக; கற்பனைய விரிச்சிக்கோங்க கீழ் கண்டவாறு, எனக்கு திடீர்னு ஒரு 1000 வருஷம் வாழுற மாதிரியான வரம் கிடைச்சிருச்சு (அய்யோ நிஜ வாழ்க்கையில அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேங்க...). அதுவும் அந்த சிறப்பு வரத்தில ஒரு முப்பத்தஞ்சு மைலுக்கு மேல நிலையான இடத்தில பூமியை மட்டும் சுத்த விட்டு நான் கீழிருப்பவர்களின் வாழ்வையும், தேய்வையும் அவர்களின் பாரம்பரியம்/கலாச்சாரம்/பண்பாடு போன்ற மற்ற காலத்தினூடாக அழித்தெழுதும் விசயங்களையும் கண்ணுற்றுக் கொண்டே வாழ்ந்து வருவதனைப் போன்றதாக.
உங்களால் அனுமானிக்க முடிகிறதா அப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கையின் அவதானிப்பில் எத்தனை விசயங்களை கண்டுணர்ந்து எத்தனை விதமான நம்முள் எழும் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் தனிமனித/சமூக வாழ்வின் பொருட்டு எது போன்ற விசயங்களில் அலட்டிக் கொள்வது நலம் பயக்கும், பயக்காது என்பதிலிருந்து இன்னும் எது எதுக்கோ சுயமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கும்!
சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்கும் போது பிச்சை எடுத்து சாப்பிடுற நிலைக்கும் போறோமா அதுவும் நம்மோடதான், இல்ல ஊழல் செஞ்சு கோடி கோடியா சுருட்டிக் கொண்டு வாழுறோமா அதுவும் நம்மோடதான். அதப்பொருத்து ஒருத்தனுக்கும் கவலை இருக்காதுங்கிறதையும் தெரிஞ்சிக்கணும். காலம் பாட்டுக்கு இயங்கி போயிட்டே இருக்கு!
திரும்பவும் கதை. இப்போ அந்த பூமிக்கு மேல நின்னு பார்த்துட்டு இருந்தப்போ, மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம், அதே நேரத்தில ஒரு 200 வருஷத்தை பாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி இன்னைக்கு மறுமணம் பண்ணவிட்டு அதே வயசு ஆள ISOல வேலைக்கு அனுப்பி அடுத்த நிலாவிற்கு போற ராக்கெட்டின் திசையறி மானியின் புரெஜெக்ட் கட்டுறதின் தலைமைக்கு ஆளாப் போடுற அளவிற்கு மாறியிருந்தா அதிசயமா இருக்குமா இல்லையா. வெயிட், வெயிட், இந்த நிலையில பாவம் அந்த மொட்டை போட்ட பாட்டி, வெறும் ஈயை எண்ணியே, போர் அடிச்சுப் போயி சேர்ந்திருக்கும் சமூகத்தின் மேல அத்தனை கோபத்தையும் வைச்சிட்டு; நியூக்ளியார் வெப்பனையே மனசிக்குள்ளர அது கட்டி முடிச்சிருக்கும் தான் சாவும் பொழுது இந்த ஊரையே எவனெல்லாம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்தானோ அவனப் பூராவும் கூடவே வாரிக்கிட்டு போற ரேஞ்சிற்கு... யாருக்குத் தெரியும் அது என்ன புத்தகமா எழுதினிச்சு, நாம தெரிஞ்சிக்க.
சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். ஆனா, அதே கால கட்டத்தில் ஏதாவது பலப்பல மனுசியோ/மனுசனோ அதன் வலியை நன்கு உள்வாங்கி சிறிது சிறிதாக நம்ம பாட்டியின் தெருமுனையிலோ ஊரின் மறு கோடியிலோ முனகியிருக்கக் கூடும். அந்த சிந்தனையின் பொருட்டு விளங்காத தடிமாட்டுத் தோல் கொண்ட மற்ற மனிதர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்; நாம் பேசிக் கொண்டிருக்கும் பாட்டியின் சிறு வயதின் தேவைகளும், ஏக்கங்களும், வலிகளும்... இது போன்றதாகத்தான் சமூகத்தின் தேவைகள் காலம் தோரும் விரித்து உள்வாங்க உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.
தனக்கான சிந்தனைகளுக்கு கூட வாய்பூட்டு போட்டு, நழுவிக் கொண்டு நன்றாக வாழ்ந்து முடித்திருக்கிறோம் (தனக்கு மட்டுமேயாக) என்று எண்ணி மண்ணுக்குள் புகுந்து பாறையின் ஒரு பகுதியா மீண்டும் ஆகிக்கொள்வதில், யாருக்கு லாபம்?
இப்போ பாயிண்டிற்கு வருகிறேன், என்னுடைய தளம் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது என்று கூறினேன். எழுதுவது அனைத்தும் எனக்கேயான சுய விமர்சனங்களும், என்னால் முடியாத, என்னை விட பெரிதாக எனக்கு முன்னால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வை பொருத்தான சிக்கல்களில் ஏன் நான் இப்படி ரியாக்ட் செய்கிறேன்; எப்படியாக எனக்கு வழங்கப்பட்ட சூழல்களிலிருந்து மீண்டு அதன் பொருட்டான தெளிவு சார்ந்த கட்டுரைகளையுமே, தேடல்களையுமே இங்கு பிரதானமாக வைத்து எழுதி வைக்கிறேன்.
இந்த வலைத்தளத்தின் மூலமாக என் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் மக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வளவுதான். வேறு எங்குமே இதனை வைத்துக் காரியம் சாதித்துக் கொள்ளவோ, அல்லது நாளக்கி அவர்கள் தேவைப்படுவார்கள் கர்மமே கண்ணாக கும்மியடிக்க வேண்டிய நிலையில் எந்த மனிதர்களையும் நான் பிடித்தும் வைத்திருக்கவில்லை, அவர்களும் என்னைப் பிடித்து வைத்திருக்கவில்லை? ஆச்சர்யம்தானே?! அப்படியான மனிதர்கள் இங்கு மென்மேலும் இருக்கக் கூடும்.
இது போன்ற புரிதல்கள் உண்மையாக தன்னுடைய கருத்துக்களை பதிய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பா உதவக் கூடும். இல்லையெனில் கூட்டமாக வந்து, கூட்டமாக சென்றால் நாம் எதுவுமே தனிமனித சோதனைகள் சார்ந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழ ஒரு போதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியாது.
மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.
பல இடங்களில் நான் குறிப்பிட்டபடி இந்த தளத்திற்கு வந்து வாசிப்பவர்கள் முதலில் என் பெயரைக் கொண்டு முன் முடிவு செய்பவர்கள் அத்தோடு நிற்கட்டும், அதனைத் தாண்டியும் எடுத்தாளும் பேசு பொருள், எழுத்து நடை உவப்பாய் இல்லையா, கழியுங்கள். பொருட்டு கிடையாது. ஆழமறிந்தவர்கள் மட்டுமே எஞ்சினாலே போதும். இந்தத் தளம் எனக்கானது, என் விழிப்பு நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், முகம் கொடுக்கவே அஞ்சும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமே இந்தத் தளம்.
அதன் பொருட்டு எனக்கு உறுதுணையாய் இருப்பவர்கள், இங்கே பொழங்கி வருகிறார்கள். புரியாதவர்கள், புரியும் பொழுது படித்துக் கொண்டால் போதும்!
இது எந்த தனிமனித லாப நோக்கிற்காகவும் எழுதப்படும் தளமில்லை. த்தோ, அவரை தெரிந்து வைத்திருந்தால் அது ஆகும்; இவரைத் தெரிந்து வைத்திருந்தால் இதுவாகும் என்பதற்கு - என்னை மென்மேலும் வளர்த்தெடுக்க வைத்திற்கும் ஒரு விளையாட்டுத்தளம்.
என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று. ஏனெனில், எதுவும் கட்டிப் போட்டிருக்கக் கூடாது. அவர்களுக்காக நானும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, என்ற நல்ல எண்ணத்திலேயே. முகமூடியுடன் பழகிக்கொள்வது நேர விரயம், இரண்டு பக்கமுமே.
என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!
Posted by Thekkikattan|தெகா at 9:40 PM 47 comments
Labels: அனுபவம், தெளிதல் சார்ந்து, பதிவர் வட்டம், மொக்கை
Friday, November 12, 2010
கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post
கலாச்சாரம், பண்பாடு இன்னும் என்னன்னவோ சரியாகவே புரிந்து கொள்ளப்படாத ஒரு விசயத்தைப் பத்தி பேசிகிட்டு ரொம்ப அரைவேக்காட்டுத் தனமா விசனப்பட்டு பதிவுகள் மேல பதிவுகளா படிச்சு எனக்கு மண்டை காஞ்சிப் போச்சு. தேடித் தேடி அது மாதிரி பேசுற கட்டுரைகளை எல்லாம் போயி படிக்கிறதில்ல. எதிர்பாராத விதமா எடரி விழுந்து படிக்கப்போயி தனித்தனியா மறுமொழிகள் வேற இட்டு, அதனைச் சார்ந்து வேற்று சிந்தனைகளை கிளறி விடல் எண்ணி எப்பவோவது என்னோட சொந்த புரிதலை வைப்பதுண்டு.
நண்பர் கல்வெட்டு கலாச்சாரம் என்ற கழிச்சலில் போகும் வார்த்தைக்கு இப்படியாக அவரின் பதிவென்றில் விளக்கமளித்திருக்கிறார்...
...கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும். இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.
கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம். ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா? டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா? கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.
இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?
கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு...
இப்போ என்னோடது. கீழ் படிக்க நேர்பவை பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது இந்தப் பதிவிற்காக... ஆபத்தான கலாச்சாரம்...!
வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வளைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது; எப்படி வான்வெளியில் பொருட்களின் பருமனுக்கு ஏற்ப வெளியே வளைந்து பிற பொருட்களின் ஈர்ப்பினிலின்றி விலகி ஓடவோ, இழுத்து பிடித்து தன்னைச் சுற்றி சுழலலவோ ஆக்கிக் கொள்வதனைப் போன்று.
இந்த தவறாக புரிந்து உள்வாங்கி கொள்ளப்பட்ட “கலாச்சாரம்” என்ற ஒற்றைச் சொல் எப்படி அடுத்தவரின் உடல் நிலையையிம், அவரின் தினசரி வாழ்க்கையையில் கூட நிம்மதியாக இல்லாமல் ஆக்கும் அளவிற்கு, தன் கையை மீறிய ஒரு விசயம் பாதிப்பினை வழங்கி விடுகிறது.
ஒருவருக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதற்காக காலம் பிறர் ஒருவர் தன் வளர்ச்சியைக் கொண்டு எடுத்திருக்கும் முயற்சிக்கு அவரது அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே!
எதார்த்த வாழ்வில் விசயங்களின் ஓட்டம் அவ்வாறாக சுழன்றடித்து ஓடித் தேய்கையில் எப்படி தனி ஒருவனாக கடந்த கால விழுமியங்களில் சிக்கி தனக்கு உவப்பாய் இருக்கிறது என்பதற்காக, முட்நோக்கியே நகரும் கால அம்புக்குறியை வளைத்து பின்னோக்கி இழுக்க முடியும்.
இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! அந்தக் கட்டுரையில் பேசப் பட்ட விசயம் ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”பற்றியது என்பதால் இப்படியாகச் சொல்லியிருந்தேன். அது போன்ற ஒரு வாழ்வுச் சூழலில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் வயது முதிராத பள்ளிச் சிறார்கள் இல்லையே, உடல்/மன ரீதியில் சுயமாக சிந்திக்கும் நிலையில்தானே இருக்கிறார்கள்... இந்த பின்னணியில் எல்லாம் அவர்களுத் தெரிந்தேதானே இறங்குவார்கள்; எல்லா சாதக/பாதங்களையும் நேர் கொள்ளும் முடிவோடு.
ஏன், அது போன்ற உறவு நிலைகளில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா? ஏன், மனிதனின் மனம் எப்பொழுதும் ஆண்/பெண் உறவு நிலையை குறுக்கி காமம் என்ற ஊறுகாய்க்குள்ளரயே தன்னையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்கிறது? எங்கே அப்போ தவறு நிகழ்கிறது? ஒரு பெண்ணை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து சென்று அத்துடனே சுமையை இறக்கிய நபரா நீங்கள், அல்லாது மனத்துடனேயே வாழ்வுச் சாலையெங்கும் தூக்கிச் சுமக்கும் நபரா?
.... அந்தக் கட்டுரையில் சில சமூகம் கெட்டுப் போகிறதே என்று விசனத்துடன் என்ன செய்து இதனை கட்டுப்படுத்தாலம் என்ற தொனியில் கீழ்காணும் வரிகள்...
//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //
//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//
அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?
ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?
அதே சமயத்தில் இப்படியாக ஆண்/பெண் உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்; தன்னைப் பற்றிய சுயமான முடிவுகளோட, தேவைகள், குறிக்கோல் என பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்குத் தகுந்த மாதிரி தைத்துக்கொண்ட உடையை மட்டும் அணிந்து கொள்ளும் பக்குவத்தோடு. ... sum of experiences = lifely wisdom for future harmony.
இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு. அதற்காக எல்லாரும் இப்படி செய்து வாழ்க்கை புரிஞ்சிக்கோங்கப்பான்னு சொல்லல. தனக்குப் புரிஞ்சதை வைச்சு, தன்னோட வளர்ச்சியை வைச்சு, தான் வாழும் சூழலை வைச்சு மட்டுமே இந்த மொத்த உலகத்தையும் அளந்துவிட முடியாது. அதுனாலே உடம்ப பார்த்துக்குவோம். தனிமனித நிலையில் அவங்கவங்களும் தனக்குத் தேவையான வழியில, வாழ்க்கை பாடத்தை பெற அனுமதிப்போம். அடிச்செல்லாம் பழுக்க வைக்க முடியுமா??
புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?
Posted by Thekkikattan|தெகா at 12:05 PM 146 comments
Labels: அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, மொக்கை


