ஓ! பாய்!! எங்கிருந்து இந்த பகுதியை நான் ஆரம்பிக்கிறதிங்கிறதிலேயே ஜாங்கிரி சுத்துற அளவிற்கு விசயமிருக்கு. ம்ம்ம் நான் பதிவ எழுத ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகிப்போச்சப்போய்... எனக்கு இந்த கணினியில தமிழ்ல கூட எழுத முடியுங்கிறதை நானே தட்டு தடுமாறி விழுந்து, அங்க நின்னு இங்க நின்னு கடைசியா இந்த வலைப்பூக்கள், பிறகு தமிழ்மணம் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா என் சொந்த தேடல்ல (இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) இங்க வந்து விழுந்தேன்.
ஏன் அப்படி நிகழ்ந்ததுன்னா, ஏதோ ஒண்ணு இன்னும் நிறைய மனிதர்கள்கிட்ட இருந்து கத்துக்க இருக்கின்னு தேடித் தேடி கண்டம் கண்டமா பராக்கு பார்த்திட்டு கத்துக்கிட்டு வந்தாலும், நம்ம மக்கள், நமக்கு நெருக்கமானவங்க எப்படியா உரையாடிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னு வாரது இயற்கைதானே? அதானே சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாத இடமின்னாலும் இதுக்குள்ளர கெடக்கணும்னு ஒரு உறுதியும் கொண்டு அதுவும் நானே எடுத்துக்கிட்டது (இல்லன்னா, நான் விலகுகிறேன்னு பதிவ போடச் சொல்லும்...), யாரும் எனக்கு அறிவுரை கொடுக்கல. இங்க இருக்கவங்க யாரு என்னான்னு கூட அறிமுகப் படுத்தி அதுக்குப் பிறகு எழுந்து நடக்கவோ, தவழவோ சொல்லிக் கொடுக்கல. புதிசா வாரவங்க நிறைய பேரு நிறைய பக்க பலத்தோட, பின்னணியோட இப்பொல்லாம் வருவதனையும் அவதானிக்கிறேன்.
எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில என்னோட அறிவு தளத்தில யார், என்ன சொல்லுறாங்க, எங்க உண்மை இருக்கு, எங்க பாசாங்கு நிரம்பி இருக்கு, எங்க சும்மா நேரத்தை கொல்ல யாகூ, கூகுள் சாட் அறையில இருந்து நேரடியா இங்க வந்து பழகிக்கிறதுக்கு மட்டும் இருக்காங்கன்னும், அதனைத் தாண்டி எப்படி மரணத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்தவனாக, வாழ்க்கையையும் வாழ்ந்து, புரிந்து கொண்டவர்கள் யார் என்பதனையும் என்னளவிலான புரிதல்களோட மேலும் வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக எனது ஐந்து வருட வலையுலக வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். இங்கு பல வலையுலகப் போர்களை பார்த்திருக்கிறேன், பல மனிதர்களின் நிறங்களைக் கண்டிருக்கிறேன், அவர்களுக்கான அங்கீகாரப் போரில் வாழ்வின் காலத்தினையும், தேய்வினையும் கண்டுணர்ந்ததிருக்கிறேன்.
இது எப்படி இருக்கின்னா எனக்கு, இப்படியாக; கற்பனைய விரிச்சிக்கோங்க கீழ் கண்டவாறு, எனக்கு திடீர்னு ஒரு 1000 வருஷம் வாழுற மாதிரியான வரம் கிடைச்சிருச்சு (அய்யோ நிஜ வாழ்க்கையில அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேங்க...). அதுவும் அந்த சிறப்பு வரத்தில ஒரு முப்பத்தஞ்சு மைலுக்கு மேல நிலையான இடத்தில பூமியை மட்டும் சுத்த விட்டு நான் கீழிருப்பவர்களின் வாழ்வையும், தேய்வையும் அவர்களின் பாரம்பரியம்/கலாச்சாரம்/பண்பாடு போன்ற மற்ற காலத்தினூடாக அழித்தெழுதும் விசயங்களையும் கண்ணுற்றுக் கொண்டே வாழ்ந்து வருவதனைப் போன்றதாக.
உங்களால் அனுமானிக்க முடிகிறதா அப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கையின் அவதானிப்பில் எத்தனை விசயங்களை கண்டுணர்ந்து எத்தனை விதமான நம்முள் எழும் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் தனிமனித/சமூக வாழ்வின் பொருட்டு எது போன்ற விசயங்களில் அலட்டிக் கொள்வது நலம் பயக்கும், பயக்காது என்பதிலிருந்து இன்னும் எது எதுக்கோ சுயமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கும்!
சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்கும் போது பிச்சை எடுத்து சாப்பிடுற நிலைக்கும் போறோமா அதுவும் நம்மோடதான், இல்ல ஊழல் செஞ்சு கோடி கோடியா சுருட்டிக் கொண்டு வாழுறோமா அதுவும் நம்மோடதான். அதப்பொருத்து ஒருத்தனுக்கும் கவலை இருக்காதுங்கிறதையும் தெரிஞ்சிக்கணும். காலம் பாட்டுக்கு இயங்கி போயிட்டே இருக்கு!
திரும்பவும் கதை. இப்போ அந்த பூமிக்கு மேல நின்னு பார்த்துட்டு இருந்தப்போ, மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம், அதே நேரத்தில ஒரு 200 வருஷத்தை பாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி இன்னைக்கு மறுமணம் பண்ணவிட்டு அதே வயசு ஆள ISOல வேலைக்கு அனுப்பி அடுத்த நிலாவிற்கு போற ராக்கெட்டின் திசையறி மானியின் புரெஜெக்ட் கட்டுறதின் தலைமைக்கு ஆளாப் போடுற அளவிற்கு மாறியிருந்தா அதிசயமா இருக்குமா இல்லையா. வெயிட், வெயிட், இந்த நிலையில பாவம் அந்த மொட்டை போட்ட பாட்டி, வெறும் ஈயை எண்ணியே, போர் அடிச்சுப் போயி சேர்ந்திருக்கும் சமூகத்தின் மேல அத்தனை கோபத்தையும் வைச்சிட்டு; நியூக்ளியார் வெப்பனையே மனசிக்குள்ளர அது கட்டி முடிச்சிருக்கும் தான் சாவும் பொழுது இந்த ஊரையே எவனெல்லாம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்தானோ அவனப் பூராவும் கூடவே வாரிக்கிட்டு போற ரேஞ்சிற்கு... யாருக்குத் தெரியும் அது என்ன புத்தகமா எழுதினிச்சு, நாம தெரிஞ்சிக்க.
சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். ஆனா, அதே கால கட்டத்தில் ஏதாவது பலப்பல மனுசியோ/மனுசனோ அதன் வலியை நன்கு உள்வாங்கி சிறிது சிறிதாக நம்ம பாட்டியின் தெருமுனையிலோ ஊரின் மறு கோடியிலோ முனகியிருக்கக் கூடும். அந்த சிந்தனையின் பொருட்டு விளங்காத தடிமாட்டுத் தோல் கொண்ட மற்ற மனிதர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்; நாம் பேசிக் கொண்டிருக்கும் பாட்டியின் சிறு வயதின் தேவைகளும், ஏக்கங்களும், வலிகளும்... இது போன்றதாகத்தான் சமூகத்தின் தேவைகள் காலம் தோரும் விரித்து உள்வாங்க உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.
தனக்கான சிந்தனைகளுக்கு கூட வாய்பூட்டு போட்டு, நழுவிக் கொண்டு நன்றாக வாழ்ந்து முடித்திருக்கிறோம் (தனக்கு மட்டுமேயாக) என்று எண்ணி மண்ணுக்குள் புகுந்து பாறையின் ஒரு பகுதியா மீண்டும் ஆகிக்கொள்வதில், யாருக்கு லாபம்?
இப்போ பாயிண்டிற்கு வருகிறேன், என்னுடைய தளம் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது என்று கூறினேன். எழுதுவது அனைத்தும் எனக்கேயான சுய விமர்சனங்களும், என்னால் முடியாத, என்னை விட பெரிதாக எனக்கு முன்னால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வை பொருத்தான சிக்கல்களில் ஏன் நான் இப்படி ரியாக்ட் செய்கிறேன்; எப்படியாக எனக்கு வழங்கப்பட்ட சூழல்களிலிருந்து மீண்டு அதன் பொருட்டான தெளிவு சார்ந்த கட்டுரைகளையுமே, தேடல்களையுமே இங்கு பிரதானமாக வைத்து எழுதி வைக்கிறேன்.
இந்த வலைத்தளத்தின் மூலமாக என் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் மக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வளவுதான். வேறு எங்குமே இதனை வைத்துக் காரியம் சாதித்துக் கொள்ளவோ, அல்லது நாளக்கி அவர்கள் தேவைப்படுவார்கள் கர்மமே கண்ணாக கும்மியடிக்க வேண்டிய நிலையில் எந்த மனிதர்களையும் நான் பிடித்தும் வைத்திருக்கவில்லை, அவர்களும் என்னைப் பிடித்து வைத்திருக்கவில்லை? ஆச்சர்யம்தானே?! அப்படியான மனிதர்கள் இங்கு மென்மேலும் இருக்கக் கூடும்.
இது போன்ற புரிதல்கள் உண்மையாக தன்னுடைய கருத்துக்களை பதிய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பா உதவக் கூடும். இல்லையெனில் கூட்டமாக வந்து, கூட்டமாக சென்றால் நாம் எதுவுமே தனிமனித சோதனைகள் சார்ந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழ ஒரு போதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியாது.
மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.
பல இடங்களில் நான் குறிப்பிட்டபடி இந்த தளத்திற்கு வந்து வாசிப்பவர்கள் முதலில் என் பெயரைக் கொண்டு முன் முடிவு செய்பவர்கள் அத்தோடு நிற்கட்டும், அதனைத் தாண்டியும் எடுத்தாளும் பேசு பொருள், எழுத்து நடை உவப்பாய் இல்லையா, கழியுங்கள். பொருட்டு கிடையாது. ஆழமறிந்தவர்கள் மட்டுமே எஞ்சினாலே போதும். இந்தத் தளம் எனக்கானது, என் விழிப்பு நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், முகம் கொடுக்கவே அஞ்சும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமே இந்தத் தளம்.
அதன் பொருட்டு எனக்கு உறுதுணையாய் இருப்பவர்கள், இங்கே பொழங்கி வருகிறார்கள். புரியாதவர்கள், புரியும் பொழுது படித்துக் கொண்டால் போதும்!
இது எந்த தனிமனித லாப நோக்கிற்காகவும் எழுதப்படும் தளமில்லை. த்தோ, அவரை தெரிந்து வைத்திருந்தால் அது ஆகும்; இவரைத் தெரிந்து வைத்திருந்தால் இதுவாகும் என்பதற்கு - என்னை மென்மேலும் வளர்த்தெடுக்க வைத்திற்கும் ஒரு விளையாட்டுத்தளம்.
என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று. ஏனெனில், எதுவும் கட்டிப் போட்டிருக்கக் கூடாது. அவர்களுக்காக நானும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, என்ற நல்ல எண்ணத்திலேயே. முகமூடியுடன் பழகிக்கொள்வது நேர விரயம், இரண்டு பக்கமுமே.
என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Tuesday, November 16, 2010
நான் ஏன் வலைபதிகிறேன்: சுயசொரிதல்...
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டீங்களா.....:-))))))
நம்மைப்போல் பலரும் இந்த நிலையில்தான் இருக்காங்க. வரும்போதே ஆள் அம்பு படைன்னு வாறவங்க சமீபத்தில்தான் அதிகரிச்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.
அஞ்சாண்டு 'சேவை'க்கு இனிய பாராட்டுகள் தெகா.
துள்சிங்க,
உங்களுக்கு ஞாபகமிருக்கா ஒரு முறை நான் அறச்சீற்றம்(?!) கொண்டு பின்னூட்ட அரசியல் பொருத்து பதிவு போட்டு பொங்கல் வைச்சப்போ நீங்க வந்து என்ன சொன்னீங்கன்னு... :)))
//சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டீங்களா.....:-))))))//
நல்ல விசயத்திற்குதம்மா... எத்தனையோ சமர் நடந்தது கலந்துகிட்டோமா. இந்த சமர்ல கலந்துகிறது எனக்கு என்னவோ ரொம்ப அவசியமா பட்டது. So, I am in it.
//நம்மைப்போல் பலரும் இந்த நிலையில்தான் இருக்காங்க. //
தெரியும் :)
//வரும்போதே ஆள் அம்பு படைன்னு வாறவங்க சமீபத்தில்தான் அதிகரிச்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.//
ரொம்பவே! கையில பெரிய லிஸ்ட் வேறையாம்... எத்தை படிக்கிறது, எத்தை படிக்கக் கூடாதுன்னு :D
//அஞ்சாண்டு 'சேவை'க்கு இனிய பாராட்டுகள் தெகா.//
இதுக்கு நான் நெசமாவே சிரிச்சிட்டேன் வாய விட்டு... மணி வேற இரவு 10. நான் தான் உங்களூக்கெல்லாம் நன்றி சொல்லணும்வோய்... தாங்க்யூ! :)
தெகா, பதிவ ரொம்ப தீவிரமா எழுதிட்டு லேபளில் ஏன் மொக்கைன்னு (ஏன் இப்படி?)?
கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் முகுந்தம்மா பதிவில் நான் முகமூடி அணிவேன்னு சொன்னேன் (என் தனிப்பட்ட விசயத்தில்), அதுக்குள்ள இப்படி போட்டு தாக்கிட்டீங்களே.
ஐந்து வருடமா... கலக்குங்க தெகா. உங்க கருத்த சுதந்திரமா, நல்ல வலுவாக எழுதுகிறீர்கள், ஏன் மத்தவங்கள பத்தி கவலைப்படுகிறீர்கள்?
தொடர்ந்து படிக்கிறேன், சில நேரங்களில் கருத்து வேற்றுமை உண்டு, சில பதிவுகள் என் சிற்றறிவுக்கு எட்டாதவை. பல நேரங்களில் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. தொடரட்டும் உங்கள் எழுத்து
//என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று//
அதனாலதான் இன்னும் அன்னந்தண்ணி பொழங்கிட்டிருக்கோம்
அஞ்சாண்டு 'சேவை'க்கு இனிய பாராட்டுகள் தெகா.
நம்மைத் தாண்டியும் நிறைய இருக்குன்னு யோசிக்க வெச்சி என் பார்வையை (கண்ணாடியை) விசாலமாக்கினது நீங்கதானே!
அஞ்சாண்டு சேவைக்கு இனிய பாராட்டுகள் தெகா. நல்ல வலுவாக எழுதுகிறீர்கள்,தொடரட்டும் உங்கள் எழுத்து
குடுகுடுப்பையை வழிமொழிகிறேன்..
தொடர்ந்து எழுதுங்கள்.. அது உங்களுக்கானதாக இருந்தாலும் நாங்களும் வாசித்தே அறிந்து கொள்கிறோம்..
@ அருணையடி செம கமெண்ட் .. அன்னந்தண்ணி புழங்கிட்டிருக்கோமில்ல..அண்ட் கண்ணடிய விசாலமாக்கிறது..:))
பட் முன்னக்கி இப்ப தேவலை.. மஞ்சக்கலர் சிங்கிச்சா எல்லாம் இங்க இருந்துச்சு..
நல்ல கருத்து. நமக்காக எழுதுகிறோம், படிப்பவர்கள் படிக்கட்டும், கருத்துக்கூறட்டும், அது போதும்.
தெக்ஸ்,
அஞ்சு ஆச்சா .. நமக்கு சீனியர் .. ஆக, வாழ்த்த எனக்கு வயசில்லை; அதனால் ... அதுக்குப் பொறவாட்டி என்ன சொல்லணும்னு தெரியலையே!!!!
//வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக..//
ஓ! வாழ்வினைப் படிக்க முடியாதுங்கிறதுனால நம்ம வீட்டுப் பக்கம் அதிகமா வர்ரதில்லையா!! சரி.. சரி...
//சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். //
இந்தப் பத்தி மிகவும் பிடித்தது.
வளர்க ........
||(இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) ||
ம்ம்... தமிழ்கூறும் நல்லுலகில் ப்ளாக் எழுதவே அருவெறுப்பா இருக்கு..
||மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம்,||
ம்ம்.. உடன்கட்டை ஏறுவத விட்டுட்டீங்களே...
||இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.||
ம்ம்... இது பக்குவம் தெகா...
நானும் நிறையத் தடவை நினைத்திருக்கிறேன்... இங்க உக்காந்து என்ன எழுதி... என்ன கிழிச்சுன்னு...
ஆனா.. இப்டி ஒரே எண்ண அலைகள் உள்ள ஓரிரு ஜீவன்களையும் (நம்ம நல்லுலகத்தில) இங்கேதான் பார்க்க முடிந்தது.. முடிகிறது... இதுக்காகவே... தொடரணும்னு தோணுது..
||என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!||
ம்ம்ம்... :)
அப்புறம் அஞ்சு வருஷம்.. இந்தச் சிந்தனைகளோட இங்க வலம் வர்றது.. ம்ம்.. ஆமாம் சில தூசிய எளிதா தட்டி விட்டா உக்காந்திருக்கலாம்... inspired.. =))...
அரசூரான் சொன்ன மாதிரி... இதுக்கு எதுக்கு மொக்கை... (நானும்.. மத்தவங்க என்னை மொக்கைன்னு சொன்னத கேட்டு... நக்கலா என் கவிதைக்கு கூட மொக்கைன்னு பேரு வச்சிருக்கேன்.. இப்போ இல்ல..)
அது சரி இந்தப் பதிவை எழுதவேண்டிய உடனடிக் காரணம் என்னவாக இருக்கும் என்று என் சின்ன மூளையைக் கசக்கியதில் ஒன்றும் புரிபடவில்லை.பாலத்துக்கு அடியில் நிறைய தண்ணீர் ஓடி இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.
//நான் ஏன் வலைபதிகிறேன்//
அதைததான்யா நாங்களும் அஞ்சு வருஷமா கேக்குறோம்! ஆனாலும் அடங்க மாட்டேங்குறியே நீயி!
நண்பேண்டா!
www.worlwide-nanbenda.org
வாங்க போகன்,
//அது சரி இந்தப் பதிவை எழுதவேண்டிய உடனடிக் காரணம் என்னவாக இருக்கும் என்று என் சின்ன மூளையைக் கசக்கியதில் ஒன்றும் புரிபடவில்லை.பாலத்துக்கு அடியில் நிறைய தண்ணீர் ஓடி இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.//
:)) ஆமாம்! நிறைய கரைபுரண்டு ஓடியிருக்கிறது தொடராகக் கூட வரலாம். அதற்கு ஒரு முன்னுரைதான் இது. நன்கு அறிந்தேதான் சுயமாக இந்த தூக்கலான ‘நான்’ பதிவு ;)...
மற்றபடி இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹாட் டாபிக்’கும் இதுக்கு சம்பந்தமில்லைப்பா... :D
அரசூரான்,
//பதிவ ரொம்ப தீவிரமா எழுதிட்டு லேபளில் ஏன் மொக்கைன்னு (ஏன் இப்படி?)?//
தெரிஞ்சே செய்ற குசும்புதேய்ன்... ;) த்தோ... இப்போ கேட்டீங்கள்லே அதுக்கும்தான்...
//பதிவில் நான் முகமூடி அணிவேன்னு சொன்னேன் (என் தனிப்பட்ட விசயத்தில்), அதுக்குள்ள இப்படி போட்டு தாக்கிட்டீங்களே.//
இல்லாம வெளியில வந்தா feel naked எப்பயாவது முயற்சி பண்ணி பார்த்திருக்கீங்களா? அதுக்குன்னு இடமெல்லாம் இருக்கு... செமயா இருக்கும் -
//ஏன் மத்தவங்கள பத்தி கவலைப்படுகிறீர்கள்?//
எங்க கவலைப்பட்டேன், அதுனாலே அடிச்சு விட்றேன் இதுமாதிரியெல்லாம். எல்லாம் உங்க மாதிரி ஆளுங்க இருக்கீங்க என்னயச் சுத்திங்கிற ஒரு தைரியமும் ஒரு காரணம்தேய்ன் :D
வாழ்த்துக்களுக்கு - நன்றி!
எதுக்கு இப்பிடி எழுதியிருக்கீங்கன்னு புரியலை.
5 வருடம் இப்பிடி ஒட்டியிருக்கீங்கன்னு நினைச்சா மலைப்பா இருக்கு. வாழ்த்துகள்.
//மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.//
Beautiful!!!
Congrats The.Ka.
உங்களை நான் வாசிக்க தவறி விட்டேன் .இனி நிச்சயம் வருவேன் .வாழ்த்துக்கள் .
அட! மதி!!!!
நீங்களா?
நலமாப்பா? ரொம்ப நாளாச்சே..... எங்களை மறந்துட்டீங்களா?
தொடர்ந்து படிக்கிறேன், சில நேரங்களில் கருத்து வேற்றுமை உண்டு, சில பதிவுகள் என் சிற்றறிவுக்கு எட்டாதவை. பல நேரங்களில் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. தொடரட்டும் உங்கள் எழுத்து//
புரிகிறது, குடுகுடுப்பை. தொடருங்கள்... பேசுவோம். நன்றி!
புது அவதாரமே, அருணையடியே வாங்க!
//அதனாலதான் இன்னும் அன்னந்தண்ணி பொழங்கிட்டிருக்கோம்...//
அதே! பின்ன இல்லையா? எத்தனை புயல், சூறாவளி, மண்ணுக்காத்தெல்லாம் நம்ம பாத்திருப்போம்... ஹா!
//நம்மைத் தாண்டியும் நிறைய இருக்குன்னு யோசிக்க வெச்சி என் பார்வையை (கண்ணாடியை) விசாலமாக்கினது நீங்கதானே! //
உங்ககிட்ட இருந்து எனக்கும் தானே... எவ்வளவு உரையாடி இருக்கிறோம். ஆமா! இங்க பித்தானந்தா தளம் என்னாச்சு?
மிக்க நன்றி, பித்ஸ்(சிபி)!
எந்த வரிக்கு பின்னூட்டம் போடுவேன்:)
சுருக்கமாக நல்லா சொல்லியிருக்கீங்க.
//ஜோதிஜி said...
அஞ்சாண்டு சேவைக்கு இனிய பாராட்டுகள் தெகா. நல்ல வலுவாக எழுதுகிறீர்கள்,தொடரட்டும் உங்கள் எழுத்து//
வாழ்த்துக்களுக்கு நன்றி, ஜி! இது எங்கோ படிச்ச மாதிரி இருக்கே ;) ... ஓ! நீங்க வழிமொழிஞ்சிட்டீங்களா -ஹிஹிஹி.
Pretty cool! Congrats!
நன்றி முத்து!
*அருணையடி சொன்னது என்ன, என்னோட பழைய மஞ்சள் வெயில் சிங்கிச்சா டெம்ப்ளேட்டா அவரின் கண்ணாடியின் பருமனை அதிகரிக்க வைச்சிச்சுன்னு சொன்னாரு - நாங்க எங்கயோ பொயிட்டோம் :)) - நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்களே!
DrPKandaswamyPhD said...
நல்ல கருத்து. நமக்காக எழுதுகிறோம், படிப்பவர்கள் படிக்கட்டும், கருத்துக்கூறட்டும், அது போதும்..//
ஆமாங்க, ரொம்பச் சரி. அப்படியாகத்தான் இத்தனை வருடங்களையும் இங்கு ஒரு மாதிரியான சம நிலையோட என் கடையை வைத்து நிர்வாகித்திருக்கிறேன் :)
நன்றிங்க!
அதைததான்யா நாங்களும் அஞ்சு வருஷமா கேக்குறோம்! ஆனாலும் அடங்க மாட்டேங்குறியே நீயி!
நண்பேண்டா!//
பித்ஸ், ஹிஹிஹி ஏன்ன்ன்ன்... இதெல்லாம் சொல்லிச் திருந்திர பொறவியாயிது ;)
//நம்மைப்போல் பலரும் இந்த நிலையில்தான் இருக்காங்க. வரும்போதே ஆள் அம்பு படைன்னு வாறவங்க சமீபத்தில்தான் அதிகரிச்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.//
ரிப்பீட்டே
:) 18+ தான் இப்ப ட்ரெண்டாம், பதிவுலகம் பாதாளத்திற்குப் போகுது
அடியார் யாரோ என்று இருந்தேன் ..:) கண்டுகொண்டேன்... நானும் 4 வருசமா கிறுக்கீட்டு இருக்கேன் (பின்னே!!) வளர்ந்து இருக்கறனான்னு தெரியலை...
5 வருசன்க்கிறதுனால நீங்க சீனியர் ..வாழ்த்துக்கள்
வாங்க தருமி,
//அஞ்சு ஆச்சா .. நமக்கு சீனியர் .. ஆக, வாழ்த்த எனக்கு வயசில்லை; //
ஹாஹாஹா... அது சரி! சீனி இயரு...
//ஓ! வாழ்வினைப் படிக்க முடியாதுங்கிறதுனால நம்ம வீட்டுப் பக்கம் அதிகமா வர்ரதில்லையா!! சரி.. சரி... //
என்ன இப்பிடி பகடி பண்ணிப்புட்டியா :)? உங்ககிட்ட படிக்காம வேற எங்க படிக்கப்போறேன். இந்தப் பதிவில பல இடங்களில் உங்கள நினைச்சுதான் ஹைலைட் பண்ணியிருக்கேன்; உங்க அமெரிக்கன் கல்லூரி வகுப்பு அறையில் இல்லாத குறையை உங்க கட்டுரைகளில் உரையாடிக் கொள்வதின் மூலமாக ஓரளவிற்காகவாவது கிடைக்கிறதேன்னு, மிக்க மகிழ்ச்சியடைந்திருக்கேன் தருமி. எனது பார்வை கூடுதலாக பரந்து பட்டதாக ஆக்கியதில் உங்களுக்கும் இடமுண்டு எப்பொழுதும்.
ஞாபகமில்லையா தம் கட்டி 2007ல எத்தனை பதிவுகள் ஏதோ டெஸ்ட்க்கு படிக்கிற மாதிரி படிச்சு, படிச்ச கையோட என்னோட எண்ணத்தை பதிந்திருப்பேன்.
ஆனா, எப்படியோ 06ல உங்கள தவற விட்டுருக்கேன். எவ்வளவு ஆரோக்கியமா ‘உரையாடல்’ செஞ்சிருக்கீங்க பல பதிவுகளில். விடுங்க, எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம், பேக் ரெஃபரன்ஸாக உங்க பதிவுகள் உண்டுங்க. எல்லாம் நம்ம மெமேரி டேடா பேஸ்ல இருக்கு.
தங்களின் தொடர் watching me over makes me feel good. Thank you!
ஐந்து வருடம் ஆகா! வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
கலகலப்ரியா said...
//ம்ம்... தமிழ்கூறும் நல்லுலகில் ப்ளாக் எழுதவே அருவெறுப்பா இருக்கு..//
ஹ்ம்ம்ம்... சில பதிவுகளையும், அதற்கான பின்னூட்டங்களையும் படிக்க நேர்ந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவ்வளவு மூர்க்கமானதொரு வளர்ப்பா?
//ம்ம்.. உடன்கட்டை ஏறுவத விட்டுட்டீங்களே...//
எதனை விடுவது எதனை சேர்ப்பது... :(
//நானும் நிறையத் தடவை நினைத்திருக்கிறேன்... இங்க உக்காந்து என்ன எழுதி... என்ன கிழிச்சுன்னு...//
இதற்கு பின்னான உங்களின் மன அயர்ச்சியையும், வலியையும் என்னால் உணர முடிகிறது, தோழி! உங்களைப் போன்றவர்கள் அது போன்ற ஒரு (புரியா) சமூகத்திற்காக கல்லடிகளை பெற்றேனும் மேலேழும்ப துணைபுரிந்து நிற்பது என்பது மேலும் பல உயிர்கள் ‘நடு வீட்டில்’ நாண்டு கொண்டு சாகும் சூழலிலிருந்து காப்பாற்றவாவது உதவினாலே நீங்கள் பட்ட கல்லடிகளுக்கு பொருளுள்ளதாகிப் போகும்.
//ஆமாம் சில தூசிய எளிதா தட்டி விட்டா உக்காந்திருக்கலாம்...//
உண்மை.
வாங்க சேது,
//எதுக்கு இப்பிடி எழுதியிருக்கீங்கன்னு புரியலை. //
ஓ! சேது, உங்களுக்கு என்னுடைய எழுத்து புதிதல்லவா, அப்படித்தான் தோன்றியிருக்கக் கூடும். புதியவர்கள், எதையானவது எதிர்பார்த்து இங்கு வந்து ஏமாந்து அவர்களின் நேரத்தை கொலை செய்து கொள்ள வேண்டாமெ என்று பொதுவான என்னுடைய ஆர்வம் சார்ந்த தளத்தை மீண்டும் அறியத் தந்திருக்கிறேன்.
//5 வருடம் இப்பிடி ஒட்டியிருக்கீங்கன்னு நினைச்சா மலைப்பா இருக்கு. வாழ்த்துகள்.//
பேசுவோம். தொடருங்கள்...
Beautiful!!!
Congrats The.Ka.//
வாங்க மதி, அத்தி பூத்தார்ப்போல வலைப்பதிவுகளின் பக்கமாக பார்ப்பதில் சந்தோஷம்!
நீங்க சுட்டிக்காட்டிய இந்த பதிவின் பகுதி ரொம்ப முக்கியமானது, அதன் பருமனையும், அடர்த்தியையும், ஆழ்ந்த பொருளையும் நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். இது எதற்காக உதவப் போகிறதெனில் ஒரு சமூகமாகவும் அதே நேரத்தில் தனி மனித சவால்களை கூர்ந்த தேர்த்தியுடன் முகம் கொள்வதற்கேனும், சிந்தனைகளை அடுத்த கட்ட தளர்த்திற்கு நகர்த்துவதற்குமாக...
தனிப் பதிவுகளில் பேசுகிறேன். நன்றி, மதி! தங்களின் தொடர்ந்த ஊக்குவித்தலுக்கு.
dr suneel krishnan said...
உங்களை நான் வாசிக்க தவறி விட்டேன் .இனி நிச்சயம் வருவேன் .வாழ்த்துக்கள்//
கண்டிப்பாக டாக்டர். தொடருங்கள், உரையாடுவோம். உங்களைப் போன்றவர்கள் இங்க உரையாட வருவது பேசு பொருளின் முழுமையை எட்ட உதவலாம். நன்றி Dr. சுனில்!
/எந்த வரிக்கு பின்னூட்டம் போடுவேன்:)
சுருக்கமாக நல்லா சொல்லியிருக்கீங்க//
இப்படி சுருக் நறுக்கின்னு சொல்லிபுட்டு எஸ்ஸாகிட்டீங்களே...
நன்றி, ராஜ நட!
//The Analyst said...
Pretty cool! Congrats!//
Thanks for your continued support and encouragement. :)
ரிப்பீட்டே
:) 18+ தான் இப்ப ட்ரெண்டாம், பதிவுலகம் பாதாளத்திற்குப் போகுது//
கோவியாரே, என்ன இன்னும் ஓர் 1500 பேர் 18+ போட்டு பதிவுகள் ஏத்த ஆரம்பிச்சா கண்கொள்ளா காட்சியா இருக்கும் ;)...
//துளசி கோபால் said...
அட! மதி!!!!
நீங்களா?
நலமாப்பா? ரொம்ப நாளாச்சே..... எங்களை மறந்துட்டீங்களா?//
ரிப்பீட்டேய்!
எங்களை இப்படி மறந்துட்டீங்களே?! :(
தெக்ஸ் பதிவுக்கு வருவீங்க. எங்க பதிவுக்கு வர்ரதில்லை ... என்ன அக்கிரமம்!
தெக்ஸ்
கணக்கு தப்பு. நான் தான் சீனியர் - நான் - 2005 மே
//தருமி said...
//துளசி கோபால் said...
அட! மதி!!!!
நீங்களா?
நலமாப்பா? ரொம்ப நாளாச்சே..... எங்களை மறந்துட்டீங்களா?//
ரிப்பீட்டேய்!
எங்களை இப்படி மறந்துட்டீங்களே?! :(
தெக்ஸ் பதிவுக்கு வருவீங்க. எங்க பதிவுக்கு வர்ரதில்லை ... என்ன அக்கிரமம்//
மதி, உங்களுக்கு இவ்வளவு பெரிய ஜுனியர் ரசிகர் படை இருக்குதின்னு சொல்லவே இல்ல :))) ... பாருங்க எவ்வளவு மக்கள்ஸ் மிஸ் பண்ணுறாங்கன்னு, வெளிய வாங்கங்க.
அடியார் யாரோ என்று இருந்தேன் ..:) கண்டுகொண்டேன்... நானும் 4 வருசமா கிறுக்கீட்டு இருக்கேன் (பின்னே!!) வளர்ந்து இருக்கறனான்னு தெரியலை...
5 வருசன்க்கிறதுனால நீங்க சீனியர் ..வாழ்த்துக்கள்//
மங்கை, ‘அடியார்’ அப்பப்போ புது புது அவதாரங்கள் எடுப்பார்கள், அதனை க்ளியர் செய்துக்கவே கொஞ்சம் அவரை அடையாளப்படுத்தினேன், புரிஞ்சிட்டீங்க.
ஆமா, ஆமா நான் சீனியருல்ல கேருஃபுல்லு :)) நன்றி மங்கை. தங்களின் தொடர்ந்த ஊக்குவிப்பிற்கும், மாற்று கருத்துக்களையும் பக்குவமாக பின்னூட்டங்களின் மூலமாக முன்வைத்து பதிவின் நோக்கத்தை முழுமையாக்கி தருவதற்கும் -ரொம்ப நன்றிங்க!
//முகுந்த் அம்மா said...
ஐந்து வருடம் ஆகா! வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//
தொடர்ந்த ஊக்குவிப்பிற்கும் கருத்து ஊடாடலுக்கும் நன்றி, keep adding Mukundamma :)! Thank you!!
Post a Comment