என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (62)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (103)
- இந்தியா (24)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (26)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (5)
- கவிதை (16)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (123)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (29)
- சீரழிவு (17)
- செய்தி (38)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (3)
- தாமரை (1)
- திராவிடம் (7)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (105)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (25)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (3)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (11)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (34)
- விமர்சனம் (29)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (1)

Friday, April 09, 2021
தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!
Posted by Thekkikattan|தெகா at 9:09 PM 0 comments Links to this post
Labels: அரசியல், இந்தியா, சமூகம், தமிழ்நாடு, திராவிடம், மக்களாட்சி
Friday, February 26, 2021
கமல் அரசியல் அபத்தங்கள் - சக்கர நாற்காலி/கிராமசபை கூட்டம்
சக்கர நாற்காலியில் அமர்ந்து சொந்திரவு தரமாட்டேன்!
லெட் மீ கெஸ், கமல் தட்டை தூக்கிட்டு தளபதிகிட்ட போயிருக்கணும். அவரு தம்பி நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே, அப்படி ஓரமா போயி விளையாடுன்னு சொல்லி அனுப்பிட்டார். மிதி தாங்க முடியாம, வெளியில வந்து உலக்கை தன்னோட முன்னோர்கள் வழியில் புத்தியை காட்டி இருக்கும்.
@@@@@****@@@@@
நான் தான் கிராமசபை கூட்டம் கண்டுபிடித்தேன்:
கமல் எல்லாம் அரசியல் பழகலேன்னு இப்போ யார் அழுதா? இப்போ என்ன நடந்திட்டு இருக்கு இவரு என்ன பேசிகிட்டு அரசியல் செய்றோம்னு பேர் போட்டுகிட்டு திரியறார்?
ஆட்சியில இல்லாத ஓர் எதிர் கட்சியை நோண்டுறதில உள்ள லாபம், தனக்கு சம்பளம் போடுற மத்திய அரசை நேரடியா விமர்சனம் பண்ற துணிச்சலும் நேர்மையும் இல்லையே, ஏன்? ஏன் அழுத்தமா கிள்ளி வைச்சாத்தான் அடுத்த நகர்விற்கான பேமெண்ட்னு சொல்லிட்டாங்களா?
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்பெற்றிருந்தா இந்த கிராமக் கூடுதல்கள் தேவையா? முறைபடுத்தப்பட்ட அரசு உள்ளாட்சி கட்டமைப்பு 1000 பேர் வாழும் ஒரு வார்டிலிருந்து 8000 பேர் வாழும் ஊராட்சி வரைக்கும் வீதி பை வீதியாக சென்று பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டு வந்து சேர்த்து விடும் அமைப்பில்தானே இருந்தது. ஏன் தேர்தல் நடத்தலேன்னு கேக்கணும். யார் செஞ்சா என்ன வேலையானா சரித்தானே? இதிலென்ன போட்டி வேண்டிக்கிடக்கு. அதுவும் கை கறைபடாத ஒரு சொக்கத் தங்கமான நீங்க இப்படி பேருக்கு ஆசைபடலாமா?
அப்படி எடுத்துக்கிட்டு போறதை விட்டுப்போட்டு, என்னமோ தன்னையே தேவ தூதரா கருதிகிட்டு தானே கிராம சபைகளை இந்தியக் கிராமங்களில் அறிமுகப்படுத்தியது போல பேசுவதை எதனில் சேர்ப்பது...
அப்போ கீழே புகைப்படத்தில் உள்ள, இது போன்ற கூட்டங்களை நடத்தியதையெல்லாம் என்ன பெயர், செயலென்று பெயரிடுவது மிஸ்டர் மய்யம். 😂🙄😏
Posted by Thekkikattan|தெகா at 5:00 PM 0 comments Links to this post
Labels: அரசியல், அனுபவம், கலைஞர், சமூகம், செய்தி, தமிழ்நாடு, நிகழ்வுகள்
முதல் கோணல் முற்றும் கோணல்! PMK's Election Stunt
நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல! இப்படி ஒரு (ஜாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க ஜாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம்.
யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.
உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.
சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...
திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க.
அண்ணா எந்த காரணங்களுக்காக அதை படமெடுக்க விட்டர், பின்பு சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.
நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.
எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?
அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!
பி.கு: இந்தப் பதிவு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போது எழுதியது.
Posted by Thekkikattan|தெகா at 4:44 PM 0 comments Links to this post
Labels: அரசியல், அனுபவம், இந்தியா, சமூகம், தமிழ்நாடு, திராவிடம், ஜாதி
கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech
கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
Posted by Thekkikattan|தெகா at 4:38 PM 0 comments Links to this post
Labels: அரசியல், இந்தியா, கலைஞர், சமூகம், சினிமா, திராவிடம், நிகழ்வுகள், முதுமை
Wednesday, February 24, 2021
சமூக ஊழலைப் பேசாத சகாயம்!
தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?





Posted by Thekkikattan|தெகா at 5:08 PM 0 comments Links to this post
Labels: அரசியல், இந்தியா, சமூகம், சீரழிவு, செய்தி, நிகழ்வுகள், மக்களாட்சி
ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்கவைக்கப்பட்டார்?
எப்போதுமே நமது மனது புறவயமான மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதிலேயே பெரும் உவகை கொள்கிறது. அதற்கென காட்சிப் படுத்தலும், மாயவாத செயல்பாடுகளை காணும் போதும் நாம் வெகு எளிதாக அந்த சூழ்ச்சிகளுக்குள் விழுந்து விடுகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்திய, பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வுக்கு காரணமாகிய ஓர் ஆளுங்கட்சி, தேர்தல் கால ஸ்டண்டாக கெடா வெட்டி விருந்து வைத்தாலும், அந்த ஒரு வேளை உணவிற்குப் பின்னாக தாங்கள் இழந்த, இழக்கவிருக்கிற உரிமைகளை எண்ணிப் பார்க்காமல் கை அலம்புகிறோம்.





Posted by Thekkikattan|தெகா at 4:57 PM 0 comments Links to this post
Labels: அரசியல், அனுபவம், கலைஞர், சமூகம், திராவிடம், நிகழ்வுகள்
Sunday, January 24, 2021
பெரியாரின் பொருளடக்கம்: Periyar In A Nutshell!
நீங்களும் மனிதர்களாகி கொஞ்சமே சிந்திக்க ஆரம்பித்து இதில் ஏதாவது ஒன்றை தொட்டுப் பேசினாலும், வெறுக்கப்படுவீர்கள்.


Posted by Thekkikattan|தெகா at 8:11 PM 0 comments Links to this post