Thursday, December 31, 2020

வேளாண் சட்டமும் விவசாயிகள் போராட்டமும்!

 கடல் அலையைப் போல் இங்கே விவசாயிகள் சாரை சாரையாக ஒரு நகரத்திற்குள் 1 கோடியே 30 லட்சம் எண்ணிக்கையில் படையெடுத்து செல்வதின் பின்னால் உள்ள வலியை, அவர்களின் பயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனை பேரும் எவ்வளவு இன்னல்களை சகித்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்துவார்கள். எத்தனைப் பேருக்கு காய்ச்சல், கொரோனா தொற்றுப் பரவல், பசி, பட்டினி, இயற்கை அழைப்பிற்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்துவார்கள்.
ஆனால், குந்துனாப்ல தமிழ்நாட்டு அதிமுக (லாம்ப் போஸ்டுகள்) எம்பிக்கள், வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்காதேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, ஓட்டுப் போட்டு சட்டத்தை அமுல் படுத்த உதவியாச்சு.
ஆனா, பசு குசுவின மாதிரி தனக்கும் இப்போ நடந்துக்கிட்டு இருக்கப் பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லேன்னு பச்சைத் துண்டை கட்டிக்கிட்டு ஃபோட்டோ சூட்டும் பண்ணிக்கிட்டாச்சு.
ஆனா, அங்கே எலும்பைக் கடிக்கும் பனியில் உட்கார்ந்து இரவு பகலாக போராடும் அப்பாவி மக்களின் பாவம் உங்களைச் சும்மா விடாது! @@@@@@

இந்த வேளாண் சட்டங்கள் மட்டும் திரும்பப் பெற வில்லை என்றால், நியாய விலைக்கடைகள், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள், மற்றும் சிறு வேளாண் குடிகள் உழவர் சந்தைகளுக்கு வந்து போவது எல்லாம் படிப்படியாக காணாமல் போய் விடும்.
எப்படி ஏன் எதற்காக என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிங்க-
அம்பானி, அதானி, மோடி, அமித்து மற்றும் இதர குஜ் கேங்க், ருசி கண்ட பூனைகளாகி விட்டன. மக்களின் பொதுப் பணத்தை வைத்தே அரசு செய்யத்தக்க வியபாரத் சந்தையை எல்லாம் ஈசி பணம் செய்து கொழுக்க, அவர்களுக்குள்ளாகவே மடை மாற்றி கொள்கிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான் இப்பொழுது இந்த வேளாண் துறையிலும் கை வைப்பது.
ஜியோ வந்தப்போ என்ன நடந்தது ஞாபகமிருக்கா? அடிமாட்டு விலைக்கு டேட்டா கொடுத்து, இலவச டாக் டைம் அது இதுன்னு நீங்க எல்லாம், ஏனைய போட்டி ஆட்களை விட்டுவிட்டு வேக வேகாம அவன்கிட்ட வார மாதிரி செஞ்சான். அதற்கு நம்ம பிரதமரே விளம்பரத்தில வந்தார்! ஆண்டு போக என்ன செய்தான் போட்டிக் கம்பெனிகளை எல்லாம் போண்டியாக வைத்து விட்டு தான் மட்டுமே சந்தையில் நின்றான்.
அதேதான் இதனிலும் நடக்கப் போகிறது. நல்ல விலை நாங்களே கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்னு, ஏனைய போட்டி ஆட்களை எல்லாம் காலி செய்து விட்டு, பின்பு அவன் வைத்து வாங்குவதுதான் விலை. கொடுத்து விட்டு அவன் வைத்து விற்பது தான் விலை நமக்கு.
இதன் மூலமாக அடிப்படை விளை பொருட்களின் விலையை நேரடியாக மக்கள் சந்தையிலும், அதே நேரத்தில் பங்குச் சந்தையிலும் மனிபுலேட் செய்து கொள்ளை லாபம் பார்க்க முடியும்.
இப்பொழுது இது விவசாயிகளுக்குத்தானே பிரச்சினை என்று பொது மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம், நாளை உங்கள் பைகளுக்கு வெடி வைக்கும் பொழுது இன்று குளிரில் வாடிக் கொண்டிருக்கும் பஞ்சாபிகளின் நினைவு வந்து போகும். என்னவொன்று that would be a bit too late!

0 comments:

Related Posts with Thumbnails