டாக்டர் ருத்ரன் சமீபத்தில காஃப்காவின் பிம்பம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக அந்த எழுத்தாளனைப் பற்றிய அறிமுகத்தை நமக்கு வழங்கியிருந்தார். முதன் முதலாக காஃப்காவினை கேள்விப்படும் அன்பர்களுக்கு Metamorphosis வாசிக்கும்மாறும் கேட்டிக் கொண்டிருந்தார்.
இன்று எதார்த்தமாக கூகுள் செய்யும் பொழுது அப்படியே முழுமையாக டவுன்லோட் கூட செய்ய வேண்டாத அளவிற்கு மெட்டமார்ஃபோசிஸ் கிடைத்தது. அது முழு நீள புதினமா அல்லது குறு நாவலா என்று தெரியவில்லை. இருப்பினும், வாசிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பினை சொடுக்கி, அனுபவிங்க.
****************************************
அடுத்து, நம்ம ஆல்டைம் சூப்பர் வுமன் அருந்ததி ராய், கரன் தாபருடனான காணொளி காணக் கிடைத்தது. ராயை நினைக்கும் பொழுது பயமா இருக்கு, எப்படி இத்தனை மிரட்டல்கள், கூச்சல்களுக்கிடையேயிம் உண்மையை உண்மையா எடுத்து வைக்கிற துணிச்சலா இருக்க முடியுதேன்னு நினைக்கும் பொழுது.
ராய் அளவிற்கெல்லாம் என்னால உண்மையா மனசாட்சியோட இருக்க முடியாட்டியும் ஏதோ மனசில நறுக்கின்னு சுட்டதை உங்க கூடவும் பகிர்ந்துக்குவோமேன்னுதான் அந்த இணைப்பை இங்கயும் போட்டு வைக்கிறேன். பாருங்க முழுசும்!
*************************
நண்பர் கல்வெட்டு தளத்தில் இன்று ஒரு அருமையான கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கதைசொல்லிகளின் வாயிலாக எப்படியாக ஒரு வாசிப்பாளன் சித்திரங்களை உள்வாங்கி, அந்த கதைசொல்லியின் நியாயப்படுத்தல்கள் நம்மை அந்த ஓட்டத்திலே எடுத்துச் சென்று உறையப் போட்டுவிடுகிறது என்று விளக்கி இருக்கிறார். அது போன்ற எண்ணச் சுழிப்பிலிருந்து விடுபட்டு தன்னித்து நிற்பதின் சாதக பாதகங்களையும், அவசியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது அந்தக் கட்டுரை. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய பதிவது...
19 comments:
இவர் விசயத்தில் ஏதோவொரு திடுக்கிடும் செய்தி இந்த ஆட்சி முடிவதற்குள் நம்மிடம் வந்து சேரும். பார்த்துக் கொண்டேயிருங்க.
பகிர்விற்கு நன்றி தெகா..
கரன் தாபர் .. கடுப்ப கிளப்பறாப்பலயே கேள்வி கேப்பதில் வல்லவர் ..:)
பகிர்விற்கு நன்றி தெகா. புத்தகமாகவே வாங்கி படித்து விடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி தெகா!
//கரன் தாபர் .. கடுப்ப கிளப்பறாப்பலயே கேள்வி கேப்பதில் வல்லவர் ..:)//
முகமே என்னமோ கடுப்புத்தான்:)
இல்லாத ஊருக்கு சர்க்கரை மாதிரின்னு வைத்துக்கொள்ளலாம்.
கேள்வின்னு சொன்னவுடனே எனக்கு நினைவுக்கு வருபவர் BBC- Tim Sebastin.
//இவர் விசயத்தில் ஏதோவொரு திடுக்கிடும் செய்தி இந்த ஆட்சி முடிவதற்குள் நம்மிடம் வந்து சேரும். பார்த்துக் கொண்டேயிருங்//
ஜோதிஜி, என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. உங்க பின்னூட்டம் படிச்சவுடனேயே கொஞ்சம் கலக்கமா இருந்துச்சு. என்ன பொருள்ள அப்படிச் சொல்லியிருக்கீங்கன்னே விளங்கிக்க முடியாம.
அப்போ, ரொம்ப உண்மையா இருக்க முயற்சி பண்ணினா அவங்களுக்கு இங்க வேலையில்ல அப்படிங்கிறீங்களா? சமரசங்களே இந்த humankind அப்படின்னு ஒத்துக்கிறோம், அப்போ.
மணிநரேன் said...
பகிர்விற்கு நன்றி தெகா.//
வாங்க, எப்போதும் உண்டு - நன்றி!
*************
ஆமாங்க முத்து மிகச் சரி. முதல் முறையா கரன் தாபர் நேர்காணல் எனக்கு.
அது அறிவின் முதிர்சியால் கொடையப் போகிறோம் என்று தயாரிச்சிட்டு வந்ததெல்லாம் எங்கே மிஸ் பண்ணிருவோமோன்னு விடாம முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி, முந்தி பேசுறது - he is pretty annoying sort, however, seems like good at digging up what he wanted to hear from others :)
he is pretty annoying sort, however, seems like good at digging up what he wanted to hear from others :)
//
அதே அதே.. அந்தாள் கொடுமைக்கே யாரை ப்பேட்டி எடுத்தாலும் பாக்க முடியறதில்ல..கடுப்பு பேட்டி குடுக்கிறவங்களுக்கு மட்டுமில்ல.. கேக்கற நமக்கே கடுப்ப கிளப்புவார்ன்னேன்..
.
தெகா,
பகிர்விற்கு நன்றி.
**
//அப்போ, ரொம்ப உண்மையா இருக்க முயற்சி பண்ணினா அவங்களுக்கு இங்க வேலையில்ல அப்படிங்கிறீங்களா? சமரசங்களே இந்த humankind அப்படின்னு ஒத்துக்கிறோம், //
அருந்ததிராயின் பாணியில் சொல்வதானால் பிரச்சனையை ரொம்ப சிம்பிளிபை பண்றீங்க :-)))
1.உண்மையா இருக்கனும் அது முக்கியம்.
2.உண்மையா இருப்பதால நாமும் இருக்க வேண்டும்.
ஒன்றிற்காக மற்ற ஒன்றை இழக்கமுடியாது.
இரண்டில் எதை இழந்தாலும் நமது இருப்பையே இல்லாமல் செய்யும்.
ஜாக்கிரதாயாய் இருப்பது மட்டுமே இரண்டையும் தக்கவைக்கும் தந்திரம்.
**
நீங்களும் நானும் அருந்ததிராய் போல சொல்ல முடியாது. அதற்காக தப்பாகச் சொல்லாமலோ, மெளனமாக இருக்காமலோ நம்மால் தாங்கக்கூடிய அளவிற்கு (இருப்பைக் கேள்விக்குறியாக ஆக்காமல்) அடிவாங்கலாம். :-))
சீமான்
வைகோ
அவர்களின் கொள்கைகளைப் பற்றியது அல்ல. அவர்களின் கருத்து சுதந்திரம் என்பது எப்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தினால் காவுவாங்கப்படுகிறது என்ற அளவில் மட்டும்.
அரசியல் பின்னனி இருந்தாலும் ஒரு காவல் ஆய்வாளர் கொடுக்கும் அறிக்கையில் பல வருடங்கள் களி தின்ன வேண்டும். 10 வருடங்கள் கழித்து அந்த காவலரின் அறிக்கை தவறு என்று நிறுவப்படலாம். ஆனால் ஜாமீனில் கூட வரமுடியாத தேசியப் பாதுகாப்புச்சட்டம் எப்போதும் பாயலாம். :-(((
****
கவனமாக இருப்பது என்பது கோழைத்தனமோ அல்லது சமரசமோ அல்ல. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் மேனிவெஸ்ட் வெளியிடப்பட்டது இரகிசயமாகத்தான். புரட்சியை ஏற்படுத்திய தலைவர்கள் அனைவரும் ஆரம்பகாலத்தில் தலைமறைவாய்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். அதற்காக அவர்கள் கோழைகள் அல்ல.
***
உங்களிடம் விதை இருந்தாலும் , விதைக்கும் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். கரன் தப்பார் கேட்கிறார் என்பதற்காக "ஆம்" என்றால் "சங்கு" உங்களுக்கு மட்டும் அல்ல, நீங்கள் விதைக்க வேண்டி வைத்திருக்கும் விதைக்கும்தான். :-(((
.
ஜனநாயகம் என்பது அரசு விரும்பியதைச் சொல்ல உங்களுக்கு அரசு கொடுக்கும் சுதந்திரம்.அரசு விரும்பாததைச் சொல்ல சட்டத்தில் இடம் இல்லை.
.
.
V.Radhakrishnan said...
பகிர்விற்கு நன்றி தெகா. புத்தகமாகவே வாங்கி படித்து விடுகிறேன்.//
கண்டிப்பாக செய்யுங்க, வெ.இரா! நெட்ல படிக்கிறது கொஞ்சம் அயர்ச்சியாத்தான் இருக்கு. நான் எத்தனை பக்கம் போயிருப்பேன்னு தெரியல நல்ல தொடக்கமா இருக்கு கதையின் போக்கு - இடையில சொந்த வேல வேற. நானும் பேசாம புத்தகமா வாங்கிறலாமோ! பார்க்கலாம்...
நன்றி, வெ. இரா!
வாங்க ராஜ நட,
//முகமே என்னமோ கடுப்புத்தான்:)//
அதிலும் அவரு இந்த நேர் காணலில் கொஞ்சம் வலியோட இருக்கிற மாதிரி மூஞ்சி இருந்ததே. அது உண்மையை கேட்க, கேட்க அடச் ச்சே நாம என்ன வேல பார்க்கிறோம், இந்தம்மா என்ன வேலய்யா செஞ்சிட்டு இருக்கின்னு நினைக்கச் தோணிச்சோ என்னவோ ;) ...
கல்வெட்டு வந்துட்டீங்களா வாங்க!
//ஜாக்கிரதாயாய் இருப்பது மட்டுமே இரண்டையும் தக்கவைக்கும் தந்திரம்.//
இதில் எவ்வளவு ஜாக்கிரதை என்பதில்தான் பிரச்சினையே! சில பிள்ளைகளுக்கு இளம் பிராயத்திலே இருந்தே இது நன்றாக ஆழ விதைக்கப்பட்டு சர்வ ஜாக்கிரதையாக வளர்த்து ‘இருக்க’ விட்டுவிடுகிறார்கள். அவர்கள், இது போன்ற பேச்சுக்களால் நேர விரயமே என்ற ‘சிம்பிளிஃபைடு’ கருதுகோலிலும், நாம் பேசி பெரிதாக என்னவாகிவிடப் போகிறது என்ற நினைப்பிலுமே விலகிப் இருந்து விடுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இது ஆனால் ஜாமீனில் கூட வரமுடியாத தேசியப் பாதுகாப்புச்சட்டம் எப்போதும் பாயலாம். போன்ற பயங்கள் அன்றாட நிகழ்வுகளாகிப் போனாலும் ’கிலி’ ஊட்டுவது என்பதாலும் தவிர்க்கப்படலாம். ஆனால், இது போன்ற பாதையைத்தான் வரலாறு தவறாமல் ஒவ்வொரு ஆளும் அரசாங்கங்களும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது.
.//உங்களிடம் விதை இருந்தாலும் , விதைக்கும் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். கரன் தப்பார் கேட்கிறார் என்பதற்காக "ஆம்" என்றால் "சங்கு" உங்களுக்கு மட்டும் அல்ல, நீங்கள் விதைக்க வேண்டி வைத்திருக்கும் விதைக்கும்தான்.//
புரிகிறது. அந்த நேர்க்காணலில் நோக்கமும் கூட அதுக்காகத்தான் என்பதனைப் போன்றே காட்சியளித்தது, மற்றபடி எதிர்தரப்பில் என்ன விசயம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனை உள்வாங்க வைக்கும் ‘ஆங்கில்’ இல்லை.
//ஜனநாயகம் என்பது அரசு விரும்பியதைச் சொல்ல உங்களுக்கு அரசு கொடுக்கும் சுதந்திரம்.அரசு விரும்பாததைச் சொல்ல சட்டத்தில் இடம் இல்லை.//
அதான் இங்க வைச்சு ஆணி அடிச்சிட்டீங்களே :)))) - வெளங்கிரும் எல்லாம்...
//வெளங்கிரும் எல்லாம்..//
:-))))
**
//இதில் எவ்வளவு ஜாக்கிரதை என்பதில்தான் பிரச்சினையே! சில பிள்ளைகளுக்கு இளம் பிராயத்திலே இருந்தே இது நன்றாக ஆழ விதைக்கப்பட்டு சர்வ ஜாக்கிரதையாக வளர்த்து ‘இருக்க’ விட்டுவிடுகிறார்கள். அவர்கள், இது போன்ற பேச்சுக்களால் நேர விரயமே என்ற ‘சிம்பிளிஃபைடு’ கருதுகோலிலும், நாம் பேசி பெரிதாக என்னவாகிவிடப் போகிறது என்ற நினைப்பிலுமே விலகிப் இருந்து விடுகிறார்கள்.//
100 % உண்மை தெகா.
"போனோமோ வந்தமோ படிச்சோமா ன்னு இருக்கனும். எதுக்கு அந்தப் பிரச்சனை எல்லாம்?" என்ற குமாஸ்தா மனப்பான்மையிலேயே வளர்த்துவிடப்படுகிறார்கள். கல்லூரி வரை நானும் அப்படியே. தேசியக் கொடி தெய்வம் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். குழந்தைகளை சுதந்திரமனப்பான்மையில் வளர்க்கலாம். அடிதாங்கும் அளவுக்கு சத்தம் போடலாம்.
//மற்றபடி எதிர்தரப்பில் என்ன விசயம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனை உள்வாங்க வைக்கும் ‘ஆங்கில்’ இல்ல
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை ,உயிர், உலகம் எல்லாம் இந்தப்பிரச்சனையே இது மட்டுமே. இது முடிந்தால்தான் அவர்கள் மூச்சாவதுவிடமுடியும்.
அருந்ததிக்கும் பல்வேறு பிரச்சனைகளில் (நாம் பல பிரச்சனைகளைப் பற்றி பதிவு எழுதுவது போல) கருத்து உள்ளது. அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அட்வகேட்டாக இருக்கிறார்.
கரனைப் பொறுத்தவரையில் அவருக்கு அது அந்தவார வேலை. அடுத்தவாரம் வேறுயரையாவது பேட்டி எடுக்க போய்விடுவார். எனவே கரனுக்கு உணர்வோ புரிதலோ இருக்கத் தேவையில்லை. சுவராசியமாக பல மடக்குதலுடன் கொண்டு செல்லவேண்டும் என்பதைத் தவிர. ஏன் என்றால் அவர் கம்பி எண்ணப்போவது இல்லை.
***
ஏதோ இந்த வாய்ப்பில் பலருக்கு இந்தப்பிரச்சனையின் அடுத்தபக்கம் தெரிந்திருந்தால் அது அருத்ததிராயின் ஆளுமையின் பலன். அதைத்தாண்டி ஒரு பயனும் இல்லை. :-(((
மேதாபட்கர் உண்ணாவிரதம் இருந்தது , மணிப்பூர் Irom Sharmila வின் இன்றுவரை தொடரும் போராட்டம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீரே. :-(((
காந்திவழியில் உண்ணாவிரதம் இருந்தால் காந்தி தேசமே மதிக்காது. ரசின் இராணுவத்துனையுடன் அபகரிக்கப்படும் பாக்சைட் நிலங்களை எதிர்க்க இயலாமல் இருக்கும் அப்பாவி மக்கள் வேறு வழியேஇன்றித்தான் ஆயுதம் தாங்கிகளுடன் கூட்டணி சேர்கிறார்கள். அதுவரை கண்டுகொள்ளாத அரசு அவர்களை தேசியவிரோதச் சட்டத்தில் அமுக்ககி விடுகிறது.
***
சிதம்பரத்திற்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?.. எல்லாம் தெரியும். ஆனால் அவர்களின் நோக்கம் வேறு. அந்த நோக்கத்திற்கு தடையாய் இருக்கும் எதுவும் தேசத்துரோகம்தான். :-((((
**
//அதான் இங்க வைச்சு ஆணி அடிச்சிட்டீங்களே :)))) - வெளங்கிரும் எல்லாம்...//
நீங்களும் நானும் உள்ளேபோனால் என்ன ஒரு 100 பேருக்குத் தெரியுமா? 30 குடும்ப உறுப்பினர்கள் 40 நண்பர்கள் பிளாக்கில் 30 பேர் அதைத்தாண்டி நமது இருப்பு யாருக்கும் தெரியாது. இதை வைத்து என்ன செய்வது? அரசாங்க அரசியலமைப்புச் சட்டத்தை, அரசின் அடக்குமுறைகளை பார்லிமெண்டைத்தவிர எங்காவது விமர்சனம் செய்ய இயலும சங்குதான். பொடா, தடா, குண்டர், கஞ்சா, தேசிய பாதுகாப்பு என்று பல சட்டங்கள் காவு வாங்கிவிடும். :-(((((
***
பிரான்ஸ்ல் சென்ற வாரம் நடந்த போராட்டங்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தியாவில் என்றாவது அப்படி நடந்தது உண்டா? சோத்து மாடன்கள். சினிமா, கிரிக்கெட்டைத்தவிர ஒன்றும் இலாயக்கில்லாத உணர்ச்சியற்ற ஜென்மங்கள்.
வாழ்க இந்தியா
இந்தியா ஒருமைப்பாடு வாழ்க
ஜெய்கிந்த்!
தெகா,
Metamorphosis பற்றிய புத்தகத்திற்க்கு நன்றி. வாசித்து பார்க்கிறேன். அருந்ததி ராய் பற்றிய கானொளி பார்த்தேன், என்ன ஒரு அற்புதமான, துணிச்சலான வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி.
//Metamorphosis பற்றிய புத்தகத்திற்க்கு நன்றி. வாசித்து பார்க்கிறேன். அருந்ததி ராய் பற்றிய கானொளி பார்த்தேன், என்ன ஒரு அற்புதமான, துணிச்சலான வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி//
வாங்க முகுந்தம்மா, வாசிச்சிட்டு உங்களோட பார்வையை பகிர்ந்துக்கோங்க. உங்களுக்கு முன்னாடி நான் வாசிச்சி முடிக்கிற வாய்ப்பு கிடைத்தால் நான் செஞ்சிடுறேன்.
அருந்ததி ராயின் துணிச்சலும், அவரின் தெளிவு தன் இருப்பு பற்றிய நிலை எதனை நோக்கியதாக இருக்க வேண்டுமென்ற துணிபும் எப்பொழுதுமே அவரின் மேலான மரியாதை அதிகப்படுத்தி வைத்திருக்கிறது. நன்றி!
நல்ல பகிர்வு தெகா.... அருந்ததி ம்ம்..
psychiatry or clinical psychology பாடமா படிச்சவங்க பெரும்பாலும் இந்த இந்த புத்தகத்தை படிச்சிறுப்பாங்க.. என் முதுகலை பட்டப்படிப்பில் என்னை வழிநடத்திய மனநல மருத்துவர் பிரதீப் இந்த புத்தகத்தை கொடுத்து வாசிக்க சொன்னார். ஆனால் நம்ம சுறுசுறுப்புக்கு அது ரொம்ப காலம் தொடாமையே இருந்துச்சு. அவரா அந்த புத்தகத்தை பற்றிய ஒரு சிறு அறிமுகம் செய்துவிட்ட பிறகு ஆர்வம் மிகுதியால படிக்க தொடங்கினேன்.. அதுவும் 23 வருஷம் ஆச்சு..
தன் உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல், தன் இருப்பே சம்பாதிப்பதற்கு மட்டுமே என்றாகும் போது..தன் சம்பளம் மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியமாக படுகிற போது இந்த நாயகனுக்குள் இந்த மாற்றம் நிகழ்கிறது..
அந்த வயதில் அந்த புத்தகம் பெரிய உணர்வை எனக்குள் ஏற்படுத்தவில்லை....இப்பொழுது நினைத்தால் இந்த epiphany புரிகிறது...
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment